திருப்பத்தூர் -28
திருப்பத்தூர் மாவட்டம் கடந்த நவம்பர் 28 ஆம் தேதி தமிழக முதல்வர். எடப்பாடி .பழனிச்சாமி அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது.
இதனையடுத்து ஒரு வருடம் முடிந்த நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்டம் பிறந்தநாள் விழா, தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகம் திறப்பு விழா மற்றும் நூல்கள் வெளியீட்டு விழா என முப்பெரும் விழாவாக நடைப்பெற்றது.
விழாவில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு தமிழ் வளர்ச்சித்துறை புதிய அலுவலகத்தை திறந்து வைத்து நூல்களை வெளியிட மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் பெற்று கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.சி.வீரமணி
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு விரைவில் அரசு மருத்துவ கல்லூரி வர அனைத்து ஏற்பாடுகளும் நடைப்பெற்று வருகிறது எனவும் மேலும் சுதந்திரத்திற்கு பிறகு வாணியம்பாடி அடுத்த நெக்னாம்மலை மழைவாழ் மக்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது வரலாற்று சாதனை ஆகும் என தெரிவித்தார்.
திருப்பத்தூர் நகராட்சியில் சுமார் 105கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் முடியும் தருவாயில் உள்ளதால் மக்களின் பயன்பாட்டிற்கு உடனடியாக வரும் எனவும் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்திலே திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுபடுத்திய அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கும் வாழ்த்துக்கள் என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
No comments:
Post a Comment