திருப்பத்தூர். 27.
நமது முன்னாள் ஜனாதிபதி, ஏவுகணை நாயகன் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்காலாம் அவர்களின் 5- வது நினைவு தினத்தினை அனுசரிக்கும் வகையில் இன்று திருப்பத்தூர் ரத்னாஸ் லயன்ஸ் சங்கம் சார்பில், கொரோனா தொற்று விழிப்புணர்விலும், பொதுமக்களின் பாதுகாப்பிலும் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட முன்னாள் தேசிய மாணவர் படையினருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் ரத்னாஸ் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் மற்றும் மகாத்மா காந்தி முதியோர் இல்ல நிறுவனர் லயன்ஸ் கிஷோர்பிரசாத், செயலாளர் வினோத், பொருளாளர் சக்கரவர்த்தி, லயன்ஸ் GLT புவனேஷ்வரி, ஜெனார்தனம் மற்றும் பலர் சமூக இடைவெளியுடன் பாதுகாப்பான முறையில் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment