திருப்பத்தூர்-3.
திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளராக சத்தியநாதன் என்பவரை தமிழக அரசு நியமனம் செய்தது. இவர் இதற்கு முன் விருதுநகர் நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்தார். அவர் நேற்று திருப்பத்தூர் நகராட்சியின் புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
திருப்பத்தூர் நகர பகுதியில் கொரோனா ஒழிக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. நகராட்சி சார்பில் மருத்துவ முகாம்கள் மற்றும் கபசுர குடிநீர் முகாம்கள் நடத்தி வருகிறது. திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் கொரோனா முற்றிலும் ஒழிக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிய வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்போது நகராட்சி துப்புரவு ஆய்வாளர் விவேக் உடன் இருந்தார்.
No comments:
Post a Comment