Tuesday, August 4, 2020

வருமானமே இல்லாத நிலையில் வாடகை வாகனங்களுக்கு சாலை வரியா?: மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் கேள்வி

   
பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: வருமானம் இல்லாமல் தவிக்கும் நிலையில், வாடகை வாகனங்களுக்கு சாலை வரியை கட்ட சொல்வது நியாயமா? என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
    கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக முதன்மையாக பாதிக்கப்பட்டவர்கள் சுற்றுலா வாகன உரிமையாளர்களும், ஓட்டுநர்களும் தான். வருவாய் இல்லாமல் வாடுகின்றனர். இத்தகைய சூழலில் 3 மாதங்களுக்கு ஒரு முறை செலுத்த வேண்டிய சாலை வரியை செலுத்த வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்படுகிறது.

ஊர்திகளுக்காக வாங்கிய கடனுக்கான தவணைக் தொகையையே கட்ட முடியாததால், அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும் என்று தெரிந்தும், கடன் தவணை ஒத்திவைப்பு திட்டத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். இத்தகைய சூழலில் வாடும் அவர்களை சாலைவரி கட்டும்படி கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்? எனவே, கொரோனா சூழல் சீரடையும் வரை சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, அவர்களுக்கு அடுத்த சில மாதங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்க மத்திய, மாநில அரசுகள் திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும்.

FOLLOW US OUR SOCIAL MEDIAS




No comments:

Post a Comment