
95% மாணவர்களிடம் ஆன்லைன் கல்வி மூலம் கல்விகற்க ஏற்ற சூழ்நிலை இல்லை என்பது குழந்தைகள் உரிமை அமைப்பு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
மாணவர்களிடம் இணையவழி கல்வி கற்க ஏற்ற சூழல் தமிழகத்தில் நிலவுகிறதா என்பதை கண்டறிய தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து 5987 மாணவர்களிடம் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் குழந்தைகள் உரிமை அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. 11 வயதில் இருந்து 18 வயது வரை உள்ள மாணவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்துள்ளன. அதன்படி இந்த மாணவர்களில் 94% பேரிடம் ஆன்லைன் வகுப்புக்கு தேவையான இணைய வசதி இல்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் 1,740 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் வெறும் 3% மாணவர்களிடம் மட்டுமே ஸ்மார்ட் போன் இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த கொரோனா காலத்தில் 95% மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்துக்கும் கீழ் இருக்கிறது என்கிற உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த குடும்பங்களால் ஆன்லைன் வகுப்புக்கு தேவையான உபகரணங்களை வாங்கவே முடியாது என்று குழந்தைகள் உரிமை அமைப்பு இந்த ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

No comments:
Post a Comment