Monday, August 10, 2020

திருப்பத்தூரில் அனைத்து சமூகத்தினரும் சேர்ந்து மயானத்தை சீரமைக்க முடிவு.

 

திருப்பத்தூர் -10.

    திருப்பத்தூரில், தர்மபுரி சாலையில் உள்ள மயானத்தை சீர்செய்து நல்ல முறையில் பராமரிக்க திருப்பத்தூரில் உள்ள அனைத்து சமூகத்தினரும் முன்வந்து செய்வதாக வாக்குறுதி அளித்தனர். 

    திருப்பத்தூர் செட்டித்தெருவில் உள்ள ஏ.ஜி.எஸ். திருமண மண்டபத்தில் அனைத்து சமூகத்தினர்  திருப்பத்தூர் நகராட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அனைத்து சமூகத்தினரும் சேர்ந்து திருப்பத்தூர், தருமபுரி சாலையில் அமைந்துள்ள மயானத்தை சுத்தம் செய்து மரக்கன்றுகள் நட்டு பூங்கா போன்று அமைத்து மேலும் சடங்குகள் செய்ய தனி மேடை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. 

    அப்பொழுது நகராட்சி  ஆணையர் இராஜேந்திரன் பேசுகையில்  இருப்பதிலேயே மனிதன் கடைசியாக உறங்கும் இடம் அதுவே மயானம் ஆகும். நாம் அடுத்த மதத்தவரை பார்க்கும்பொழுது நாம் இதை எவ்வளவு சீக்கிரம் செய்கிறோமோ, நாம் நம் முன்னோர்களுக்கும், நண்பர்களுக்கும் செய்யும் ஒரு பெரிய கடைசி கால கர்மா ஆகும். இதை அனைவரும் வரவேற்கத்தக்கது ஆகும் என தெரிவித்தார். உடன் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் விவேக்மற்றும் ஏஜிஎஸ் திருமண மண்டபத்தின் உரிமையாளர் ஏ.ஞானசேகர் உட்பட பல பிரமுகர்கள் உடன் இருந்தனர்.

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

No comments:

Post a Comment