
24.08.2020 அன்று திருப்பத்தூர் மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் வருகை தர உள்ளார் என்ற தகவல் வெளியான நிலையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்கு நாளை (20.08.2020) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வளர்ச்சிப் பணிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டிட திட்ட அறிக்கை, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் கட்டிடங்கள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் சிவன்அருள், மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் வணிக வரி, பத்திர பதிவுத் துறை அமைச்சர் கே. சி. வீரமணி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளருக்கு பேட்டியளித்த அமைச்சர் ''திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மாவட்டங்கள் இன்னும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் ஆகவே செயல்படுவதால் வேலூர் மாவட்டத்திலேயே மூன்று மாவட்டங்களின் வளர்ச்சி பணி குறித்து ஆய்வு நடத்த உள்ளதாக தெரிவித்தார். உடன் மாவட்ட ஆட்சியர் சிவன்அருள் உட்பட பலர் இருந்தனர்.
FOLLOW US OUR SOCIAL MEDIAS
No comments:
Post a Comment