
பழநி முருகன் கோயிலில் தரிசனம் செய்ய இணையத்தில் முன் பதிவு செய்வேண்டும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
www.tnhrce.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து அதற்கான அத்தாட்சி சீட்டு இருந்தால் மட்டுமே கோயிலுக்குள் அனுமதி வழங்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பக்தர்கள் படி வழியாக மட்டுமே மலை ஏற முடியும் என்றும் மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கரதம், அன்னதானம் போன்ற வழக்கமான நிகழ்வுகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயிலுக்கு வருபவர்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகள் அனைத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
FOLLOW US OUR SOCIAL MEDIAS
No comments:
Post a Comment