Sunday, August 9, 2020

இந்தியாவுக்குள் ஊடுருவும் 'மர்ம விதை' பார்சல்கள் - மத்திய அரசு எச்சரிக்கை!

 வெளிநாடுகளிலிருந்து அடையாளம் இல்லாத மர்ம விதைகள் இந்தியாவுக்கு வருவதாக, மத்திய அரசு மாநில அரசுகள், விதை நிறுவனங்கள், ஆராய்ச்சியகங்கள் உள்ளிட்டவற்றை எச்சரித்துள்ளது.

இந்தியாவின் பல்லுயிரியத்தை அச்சுறுத்தும் வகையில் பெயர் அறியாத சந்தேகத்திற்கு இடமான விதைகள் கேட்கப்படாமலேயே இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து மர்மமான முறையில் வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான சந்தேகத்திற்கு இடமான விதை பார்சல்கள் உலகம் முழுக்க கடந்த சில மாதங்களாகப் பரவலாக அனுப்பப்பட்டிருப்பதாக மத்திய விவசாயத் துறை தெரிவித்துள்ளது. மாற்றுப் பெயர்களில் மர்ம விதை பார்சல்கள் யாரும் வேண்டாமலேயே அமெரிக்கா, கனடா, பிரிட்டன், நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை அமெரிக்க விவசாயத்துறை ’விவசாய கடத்தல்’ என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த மர்ம விதை பார்சல்கள் ஒரு நாட்டில் இல்லாத வெளிநாட்டுத் தாவர வகைகளின் விதைகளாக இருக்கலாம் எனவும், இவை நோயை உண்டுபண்ணுவதற்கும், ஒரு குறிப்பிட்ட நாட்டின் சுற்றுச்சூழலை கெடுக்கவும், விவசாயத்துக்குப் பாதிப்பை உண்டுபண்ணவும், தேசியப் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கவும் அனுப்பப்படலாம் எனவும் அமெரிக்க விவசாயத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்குள் ஊடுருவும் 'மர்ம விதை' பார்சல்கள் - மத்திய அரசு எச்சரிக்கை!

அதனால் மத்திய அரசு அனைத்து மாநில விவசாய துறைகள், மாநில விவசாய பல்கலைக்கழகங்கள், விதை கூட்டமைப்புகள், விதை சான்றிதழ் முகமைகள், இந்திய விவசாய கவுன்சில் உள்ளிட்டவை விழிப்புடன் இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும் இந்த விதைகளை வளரவிட்டு பின்பு எதிர்காலத்தில் அவற்றை கட்டுப்படுத்தப் பாடுபடுவதை விட இப்போதே தடுத்து விடுவது நல்லது எனவும் மத்திய விவசாயத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

கொரோனா இன்று 9/8/2020

 


சென்னை:9. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  இன்று ஒரே நாளில் 5994 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 2,96,901-ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 2,38,638 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 53,336 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இன்று ஒரே நாளில் 119 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 4,927-ஆக அதிகரித்துள்ளது.

பனிரெண்டாம் வகுப்பு முடித்தபின் வேளாண்மைப் படிப்புகள்

 

பனிரெண்டாம் வகுப்பு முடித்தபின் வேளாண்மைப் படிப்புகள்

இந்திய அளவிலும், உலகளாவிய நிலையிலும் வேளாண்மைக் கல்வியில் முதன்மைக் கல்வி நிறுவனமான கோயம்புத்தூரில் உள்ள ‘‘தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்’’ 2020_21ஆம் கல்வி ஆண்டு இளமஅறிவியல் படிப்பிற்கு மாணவர்களைச் சேர்க்கத் தேவையான வழிமுறைகள் .

படிப்புகள் :
1. இளம் அறிவியல் (வேளாண்மை) - B.Sc. (Agriculture)
2. இளம் அறிவியல் (தோட்டக்கலை) - B.Sc. (Horticulture)
3. இளம் அறிவியல் (வனவியல்) - B.Sc. (Forestry)
4. இளம் அறிவியல் (உணவு, ஊட்டச்சத்தியல், உணவு முறையியல்) - B.Sc. (Food, Nutrition, Food Systems)
5. இளம் அறிவியல் (பட்டு வளர்ப்பு) - B.Sc. (Semi culture)
6. இளம் தொழில்நுட்பம் (வேளாண்மை பொறியியல்) - B.Tech. (Agricultural Engineering)
7. இளம் தொழில்நுட்பம் (தோட்டக்கலை) - B.Tech. (Horticulture)
8. இளம் தொழில்நுட்பம் (உயிர் தொழில்நுட்பவியல்) - B.Tech. (Bio Industrial Technology)
9. இளம் தொழில்நுட்பம் (ஆற்றல் மற்றும் சுற்றுப்புறச் சூழலியல்) - B.Tech. (Energy and Environment)
10. இளம் தொழில்நுட்பம் (உணவு பதன் செய் பொறியியல்) - B.Tech. (Food Processing Engineering)
11. இளம் அறிவியல் (வேளாண் வணிக மேலாண்மை) - B.Sc. (Agriculture Business Management)
12. இளம் தொழில்நுட்பம் (வேளாண்மை தொழில்நுட்பம்) - B.Tech. (Agricultural Industrial Technology)

யார் விண்ணப்பிக்கலாம்?
இளம் அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி தேவை. தொழில்நுட்பப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, அறிவியல் பிரிவுகளில் கணிதம் ஒரு பாடமாக இருக்க வேண்டும்.

இப்படிப்புகளுக்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பன்னி ரெண்டாம் வகுப்பு. வேறு மாநிலங்களில் பயின்றவர்களாக இருப்பின், இவர்கள் நிரந்தர இருப்பிடச் சான்றிதழை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் 1/7/2020 அன்றைய நிலவரப்படி 21 வயதுக்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு வயது வரம்பில்லை.

எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?
இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, பொதுப்பிரிவினர், பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ரூ. 600, ஆதிதிராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர்,பழங்குடியினர் ரூ. 300 செலுத்த வேண்டும்.

www.tnau.ac.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

எங்குக் கல்லூரிகள் உள்ளன?

கோயம்புத்தூர் வளாகம்:
1. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.
2. தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.
3. வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.

மதுரை வளாகம்:
1. வேளாண்மைப் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.
2. ஹோம் சயின்ஸ் கல்லூரி அண்ட் ரிசர்ச் இன்ஸ்ட்டியூட்.

திருச்சி வளாகம்:
1. வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுனவம் குமுலூர், திருச்சி.
2. அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.
3. பெண்களுக்கான தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம்.

கிள்ளிக்குளம் வளாகம்:
வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் கிள்ளிக்குளம், திருநெல்வேலி.

பெரியகுளம் வளாகம்:
தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம், பெரியக் குளம், தேனி.

மேட்டுப்பாளையம் வளாகம்:
வனவியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் மேட்டுப்பாளையம்.

ஈச்சங்கோட்டை வளாகம்:
வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர்.

குடுமியான்மலை வளாகம்:
வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் குடுமியான்மலை, புதுக்கோட்டை.

வாழவச்சனூர் வளாகம்:
வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் வாழவச்சனூர், திருவண்ணாமலை.

மொத்த இடங்கள்:
B.Sc. Agriculture - 600
B.Sc. Horticulture - 125
B.Sc. Forestry - 45
B.Sc. Food & Nutrition - 45
B.Tech. (Agri. Engg) - 70
B.Sc. (Sericulture) - 30
B.Tech. (Horticulture) - 30
B.Tech. (Food Process Engineering) - 55
B.Tech. (Energy & Environment Engg.) - 55
B.Tech. (Bio Technology) - 55
B.Tech. (Bio Informatics) - 35
B.Sc. (Agri Business Management) - 45
B.Tech. (Agri Information Tech) - 30

வேளாண் பல்கலைக்கழகம் அங்கீகாரம் உள்ள தனியார் கல்லூரிகள் :
கலவை (வேலூர்), பெரம்பலூர், பொள்ளாச்சி, கண்ணனூர் (திருச்சி), நாமக்கல், தஞ்சை, குள்ளபுரம் (தேனீ), சக்தி நகர் (ஈரோடு), டி.என்.பாளையம் (ஈரோடு), தக்கோலம் (அரக்கோணம்), செம்பட்டி (திண்டுக்கல்), மா.பொடையூர் (கடலூர்), வேடச்சந்தூர் (திண்டுக்கல்), வாசுதேவ நல்லூர் (திருநெல்வேலி), சன்னாவனம் (காரைக்குடி), பேரையூர் (கமுதி), ஓசூர், உசிலம்பட்டி, ராதாபுரம் (திருநெல்வேலி), நெடுஞ்கூர் (திருச்சி) என்ற இடங்களில் உள்ள கல்லூரிகளின் 65% இடங்கள் பல்கலைக்கழகத்தின் கலந்தாய்வு வழியாக நிரப்பப்படும்.

எவ்வாறு மாணவர் சேர்க்கை நடைபெறும்?
XII மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

Aggregate Mark = Sum of [(Marks got in each subject / Maximum marks of that subject) ? 50]

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

சிறுத்தை, கரடி நடமாட்டம் என்ற சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது வனத்துறை.

 

திருப்பத்தூர் -9,  

    கடந்த சில நாட்களாக புலிக்குட்டை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் கசிந்தது. இந்நிலையில் நேற்று இரவு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் எதோ மிருகத்தின் கால் தடம் இருப்பதாக பயந்த குடியிருப்பு வாசிகள் ஆதியூர் ஊராட்சி செயலாளர் மூலமாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வனத்துறையிலிருந்து வெங்கடேசன், தயாநிதி ஆகியோர்  புலிக்குட்டை பகுதிக்கு நேரில் வந்து விலங்கின் கால் தடத்தை ஆராய்ந்தனர். 

    பின்னர் அது சிறுத்தையின் கால்தடம் அல்ல என்றும் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இல்லை என்று தெரிவித்தனர். மேலும் இது நாயின் கால்தடமாக இருக்கலாம் எனவும் மேலும் அப்பகுதியில் அருகில் ஆள் நடமாட்டம் இல்லாத நிலையில் அநேகமானோர் மது அருந்துதல், சூதாட்டம் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் அவர்கள் இதுபோன்ற வதந்திகளை கிளப்பலாம் எனவும் தெரிவித்தனர். உடன் ஊராட்சி செயலாளர் ரமேஷ் இருந்தார்.  

 

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

வங்கி ஊழியர்களுக்கு கோரோனா தொற்று- வங்கிக்கு விடுமுறை

திருப்பத்தூர் -9,

     திருப்பத்தூரில் வங்கி ஊழியர்களுக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வங்கி நிர்வாகம் வங்கிக்கு விடுமுறை அளித்துள்ளது. 



FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

உத்தரவை மீறி செயல்பட்ட தொழிற்சாலைக்கு சீல்.- வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை.

வாணியம்பாடி - 9, 

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வளையாம்பட்டு பகுதியில் தனியார் காலணி தொழிற்சாலை இயங்கி வருகிறது.  இந்த தொழிற்சாலையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இன்று முழு ஊரடங்கு உத்தரவு தமிழக அரசு அறிவித்த நிலையில் 200 தொழிலாளர்களை வைத்து தொழிற்சாலை நடத்தி வருவதாக வருவாய் துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம் தலைமையில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை விரைந்து சென்று தொழிற்சாலையை ஆய்வு செய்தனர். அப்போது பணியில் இருந்த 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வெளியேற்றி தொழிற்சாலைக்கு  சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பாங்கி ஷாப் பகுதியில் தனியார் காலணி(பாலார் ஷுஸ்) தொழிற்சாலை அரசின் உத்தரவை மீறி பணியாட்களை கொண்டு தொழிற்சாலை இயங்கி வந்ததால் வட்டாட்சியர் பத்பநாபன் தலைமையிலான வருவாய்த்துறையினர் தொழிற்சாலைக்கு சீல் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

திருப்பத்தூர் மாவட்ட கொரோனா சிகிச்சை மையங்கள் அமைச்சர் ஆய்வு.

 
திருப்பத்தூர்-9
   திருப்பத்தூரில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டு வருகிறது. அதனால் கொரோனா தொற்று பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக குனிச்சி அரசு மருத்துவமனையில் 35 படுக்கை அறையும், கந்திலி அருகே கரியம்பட்டியில் உள்ள அரசு திருவள்ளூர் கலைக்கல்லூரி விடுதியில் 65 படுக்கை அறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
    அதனை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, மாவட்ட ஆட்சியர் ம.ப.சிவன்அருள் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்பொழுது அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அவசர சிகிச்சை மையம், படுக்கை வசதிகள் தரமாக உள்ளதா? கழிவறைகள் குழாய்களில் தண்ணீர் வருகிறதா மருத்துவமனையில் மருந்து மாத்திரைகள் போதிய அளவில் உள்ளதா என சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் கே.எஸ்.டி.சுரேஷ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தீபா ஆகியோரிடம் அவர்கள்  கேட்டறிந்தனர்.அப்போது திட்ட அலுவலர் மகேஷ்பாபு, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அருண், முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், நகரச் செயலாளர் டி.டி.குமார், கந்திலி ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.ஆறுமுகம் உள்பட பலர் உடன் இருந்தனர். 
பின்னர் அமைச்சர் கே.சி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது: 
    திருப்பத்தூர் மாவட்டத்தைப் பொருத்தவரை 1,503 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் 953 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உளளனர். 550 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் மூலம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உயர் தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. 35 ஆயிரம் பேருக்கு இது வரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களுக்கு இ-பாஸ் வழங்கும் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது. இதன்படி உரிய காரணங்களுக்கு செல்பவர்களுக்கு மாவட்ட கலெக்டர் உடனடியாக இ-பாஸ் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்கள் குறித்து தினமும் மூன்று முறை வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது என தெரிவித்தார்.
 
 

FOLLOW US OUR SOCIAL MEDIAS