Wednesday, August 19, 2020

181 வது புகைப்படம் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

 

 திருப்பத்தூர் -19.   

    இன்று ஆகஸ்ட் 19 நாடு முழுவதும் புகைப்பட கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் புகைப்பட தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திருப்பத்தூர் புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு சங்க தலைவர் ஆறுமுகம் தலைமையில் மூத்த கலைஞர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு  மரக்கன்றுகளை நட்டனர்.
  

மரக்கன்றுகள் போல் புகைப்படம் கலைஞர்கள் வாழ்வும் வளர வேண்டும் என்பதே அனைவரது எண்ணமும் ஆகும். 

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

Sunday, August 16, 2020

பெண்களின் திருமண வயது: பிரதமர் அறிவிப்புக்கு கனிமொழி எம்.பி. வரவேற்பு

 
சென்னை-16

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என, மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர தினமான நேற்று (ஆக.15) டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். தற்போது, பெண்களின் திருமண வயது 18 ஆகவும், ஆண்களின் திருமண வயது 21 ஆகவும் உள்ளது. பெண்கள் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் நிலையில், அவர்களின் திருமண வயதை மாற்றியமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அவர் தெரிவித்தார். இதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அக்குழுவின் பரிந்துரைகளின்படி முடிவெடுக்கப்படும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதுதொடர்பாக, கனிமொழி எம்.பி. இன்று (ஆக.16) தன் ட்விட்டர் பக்கத்தில், "பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21-க்கு உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது என்ற பிரதமரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இந்த நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தையும் மேலும் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார். 
 
FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

வாணியம்பாடியில் மர்ம நபர் திருட முயன்ற சிசி டிவியில் பதிவான காட்சி வெளியானதால் பரபரப்பு. காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

 


 வாணியம்பாடி-16.

வாணியம்பாடி அண்ணாநகரில் வைதீஸ்வரன் என்பவர் வீட்டின் ஜன்னலை உடைத்து மர்ம நபர் திருட முயன்ற சிசி டிவியில்  பதிவான காட்சி வெளியானதால் பரபரப்பு.  

வாணியம்பாடி அண்ணா நகர் பகுதியில் வைதீஸ்வரன் என்பவர் வீட்டில்  மர்ம நபர் ஒருவர் புகுந்து ஜன்னலை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் பல மணி நேரமாக வீட்டின் ஜன்னலை உடைப்பதும், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை அடித்து உடைத்தும், அதனை கையில் வைத்து நுகர்ந்து சென்று திருட முயற்சிப்பதும் சிசி டிவி காட்சிகள் பதிவாகி உள்ளது. நீண்ட நேரம் போராடியும் பலன் அளிக்கவில்லை என்பதால் மர்ம நபர் அங்கிருந்து திரும்பி சென்றார்.

மேலும் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி செட்டியப்பனூர் நெடுஞ்சாலை சந்திப்பு தொடங்கி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி வரையில் மாலை நேரங்களில் தொடங்கி இரவு நேரங்களில் அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை கண்காணித்து செல்போன் மற்றும் பொருட்களை வழிப்பறி செய்வது வாடிக்கையாகி வருகிறது. காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

வாணியம்பாடியில் லிப்ட் கேட்டு இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற மர்மநபர்கள் - மக்களிடையே பீதி. போலீசார் வழக்கு பதிவு

 

 வாணியம்பாடியில் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்ற மர்மநபர்கள்  வாகன ஓட்டியின் கழுத்தை நெரித்து, கடுமையாக தாக்கி செல்போன், ரூ.19500 ரொக்கம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்து மர்மநபர்கள் தப்பி சென்ற சம்பவம் பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியை சேர்ந்த சமையலர் அஸ்லம் பாஷா. இவர் இன்று அதிகாலை வாணியம்பாடி அடுத்த வெள்ளகுட்டை பகுதியில் சமையல் செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் அருகே ஒருவர் இருசக்கர வாகனத்தை நிறுத்தி லிப்ட் கேட்டு உள்ளார். அவரை இருசக்கர வாகனத்தில் அமர வைத்து சிறிது தூரம் சென்றவுடன் பின்னால் அமர்ந்து இருந்த நபர் அஸ்லம் பாஷா கழுத்தை நெரித்து வாகனத்தை ஓரம் நிறுத்தியுள்ளார். பின்னர் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் அஸ்லம் பாஷாவை சரமாரியாக தாக்கி மயங்கிய பின்னர் ஆடையை கிழித்து அவரிடமிருந்த ரூ.19500 ரொக்கம், ஒரு செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறித்துக்கொண்டு அவரை சாலை ஓரம் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்ற மர்மநபர்கள் இரு சக்கர வாகனத்தை மட்டும் அருகில் உள்ள ஒரு கடை முன்பாக நிறுத்தி விட்டு தப்பி உள்ளனர்.

பின்னர் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த அஸ்லம்பாஷா மயக்கம் தெளிந்த பின்னர் அவரே எழுந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். தகவலின் பேரில் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

வாணியம்பாடியில் விடியற்காலை நடந்த வழிப்பறி கொள்ளை சம்பவம் பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 


FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.- சக வீரர்கள் வாழ்த்து!

 

முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வினை அறிவித்துள்ளார். 

அவர் கிரிக்கெட் உலகில் மகத்தான பங்களிப்பை அளித்துள்ளதாக முன்னாள் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். அவரது இரண்டாவது இன்னிங்சிற்கு சக வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தனியார் பள்ளிகளில் அதிகளவில் வசூலிக்கப்பட்டும் கட்டணத்தை தடுக்க சுயநிதி கல்வி கட்டண நிர்ணய குழு

 சென்னை-16

    தமிழகம் முழுவதும் நர்சரி, மெட்ரிகுலேஷன், மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் என 10,558 தனியார் பள்ளிக்கள் உள்ளது. இந்த தனியார் பள்ளிகளில் அதிகளவில் வசூலிக்கப்பட்டும் கட்டணத்தை தடுக்க சுயநிதி கல்வி கட்டண நிர்ணய குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், வசூலிக்கப்படும் கட்டணம் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டண நிர்ணய குழுவால் மாற்றி அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் 2019 - 2020ம் கல்வியாண்டுடன் 5400 பள்ளிகளுக்கு சுயநிதி கல்வி கட்டணக்குழு நிர்ணயம் செய்த கட்டண முறை முடிவடைந்துள்ளது.

இதனிடையே கட்டணம் நிர்ணயம் செய்யாத பள்ளிகள், முழுமையான அங்கீகாரம் பெறாத பள்ளிக்கள் என சுமார் 8,200 பள்ளிகள் இன்னும் கட்டணம் நிர்ணயம் செய்யாமல் இருக்கிறது. எனவே அந்த பள்ளிகள், 2020 - 2023 வரையிலான ஆண்டுகளுக்கு புதிய கட்டணங்களை நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியம் தலைமையில் குழு நியமிக்கப்பட்டது.

அந்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனியார் பள்ளிகள்வரும் செப்டம்பர் 25ம் தேதிக்குள் கட்டணங்களை நிர்ணயிக்க தங்களுடைய வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். புதிய கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு முன்னர் பழைய கட்டணத்தையே தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும்.

புதிய கட்டணம் நிர்ணயித்த பின்னர் அதன் அடிப்படையில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வசூலித்துக்கொள்ளலாம். இந்த ஆண்டிற்கான கல்விக் கட்டணத்தை எத்தனை தவணைகளில் வசூல் செய்வது என்பது குறித்து உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை பள்ளிகள் பின்பற்ற வேண்டும்.

மேலும், அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்யும் பள்ளிகள் குறித்து பெற்றோர்கள் நேரடியாக குழுவிடம் புகார் அளிக்கலாம். அந்த புகார் மீது விசாரணை செய்யப்பட்டு பள்ளியில் தவறு செய்து இருந்தால் கட்டணம் திருப்பி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

சென்னையில் மீண்டும் உயர்கிறது.. கொரோனா பாதிப்பு..!

சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதற்கு அடுத்து, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, கடலூர் மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.தமிழகத்தில் சீன வைரஸ் நோயான கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல தளர்வுகள் அமலுக்கு வந்து விட்டாலும், ஷாப்பிங்மால், சினிமாதியேட்டர்கள், கோயில்கள், பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவில்லை. 5 மாதங்களுக்கு மேலாகியும் மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை.

மாநிலம் முழுவதும் நேற்று(ஆக.15) 5860 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 30 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இது வரை 3 லட்சத்து 32,105 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில், மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 5236 பேரையும் சேர்த்தால், இது வரை 2 லட்சத்து 72,251 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப்பாதிப்பால் நேற்று பலியான 127 பேரையும் சேர்த்தால் 5641 பேர் வரை உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 54,217 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இது வரை தமிழகத்தில் 35 லட்சத்துக்கு அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 69,598 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. அதேசமயம், எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் அரசு அறிக்கையில் வெளியிடப்படவில்லை.

சென்னையில் கடந்த சில வாரங்களாகப் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து வந்தது. கடந்த 4 நாட்களாக மீண்டும் அது ஆயிரத்தைத் தாண்டி வருகிறது. நேற்று முன் தினம் சென்னையில் 1187 பேருக்கும், நேற்று 1179 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை மொத்தம் ஒரு லட்சத்து 15,444 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. 

சென்னைக்கு அடுத்து செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, கடலூர் மாவட்டங்களில் நேற்று மட்டும் சுமார் 300 பேர் வரை கொரோனா பாதிப்பு அறியப்பட்டது. செங்கல்பட்டில் நேற்று 336 பேருக்கும், திருவள்ளூர் 422, காஞ்சிபுரம் 184, கோவை 290, கடலூர் மாவட்டத்தில் 339 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இது வரை 20,465 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 19,382 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13,576 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 

இது தவிர, பல மாவட்டங்களில் புதிதாக நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அதே சமயம், மிகவேகமாகத் தொற்று பரவிய மதுரை மாவட்டத்தில் தற்போது புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தினமும் 300 பேர் வரை தொற்று பரவி வந்த நிலையில், அது படிப்படியாகக் குறைந்து நேற்று புதிதாக 90 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டது. இந்த மாவட்டத்தில் இது வரை 13,576 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.

 

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS