Wednesday, August 19, 2020

நிலத்தை போல் கட்டிடங்களுக்கான வழிகாட்டி மதிப்பு அதிரடியாக உயர்வு...

 
 
சென்னை: நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயித்தது போல கட்டிடங்களுக்கும் இந்த ஆண்டு மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கட்டுமானங்களுக்கு 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர்,மதுரை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளுக்கு 15 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. powered by Rubicon Project தமிழகத்தில் 578 சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பத்திரப்பதிவின்போது .வீடுகள், தொழிற்சாலைகள் போன்ற சொத்துக்களை வாங்கும் போது, நிலத்தின் மதிப்புடன், கட்டடங்களின் மதிப்பையும் பத்திரத்தில் குறிப்பிடப்பட வேண்டும். இந்த கட்டடங்களை, எப்படி மதிப்பிட வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை, பொதுப்பணி துறை ஆண்டுதோறும் வரையறை செய்து வருகிறது. திருத்தி அமைக்கப்பட்ட இந்த புதிய வழிகாட்டி மதிப்புகளை கட்டிடங்களுக்கு பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜாமோகன் இது தொடர்பாக அறிவிக்கை அனுப்பி உள்ளார். . அதன்படி சிறப்பு, சாதாரண, அடுக்கு மாடி, வணிகம், மருத்துவமனை கட்டிடம் என வகைப்படுத்தப்பட்டு, கட்டிடங்களுக்கு இந்த ஆண்டு மதிப்பு நிர்ணயம் செய்யப்படுகிறது.
 
காங்கிரீட் கட்டிடம் : அதன்படி சென்னையில் கான்கிரீட் கூரை அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்துக்கு தரை தளம் சதுர மீட்டருக்கு ரூ.8,980 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல் தளத்துக்கு சதுர மீட்டருக்கு ரூ.8,325 என்றும் இரண்டாம் தளத்திற்கு சதுர மீட்டருக்கு ரூ.8475 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது அதற்குமேல் ஒவ்வொரு தளத்துக்கும் சதுர மீட்டருக்கு ரூ.127 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சதுர மீட்டருக்கு 127 கட்டணம் சென்னையில் பழங்காலத்து கட்டிடத்துக்கு தரைதளத்துக்கு சதுர மீட்டர் ரூ.8,215 என்றும் முதல் தளத்துக்கு ரூ.7,470 என்றும், 2ம் தளத்திற்கு ரூ.7,830 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் உள்ள தளங்களுக்கு சதுர மீட்டர் ரூ.127 கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது. இதேபோன்று சாதாரண ஓட்டு வீடு மற்றும் நாட்டு ஓட்டு வீடுகள் கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களுக்கும், மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
முத்திரை கட்டணமும் உயரும் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள 32 கிலோ மீட்டருக்கு உள்ள பகுதியில் 20 சதவீதம் கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பால் முத்திரை தீர்வை கட்டணமும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த கட்டிட மதிப்பினை கொண்டு இனி வருஙகாலங்களில் முத்திரை தீர்வை வசூலிக்க பதிவுத்துறை முடிவு செய்துள்ளது.
 
மாநகாட்சிகளுக்கு எவ்வளவு கோவை, மதுரை, திருப்பூர், தஞ்சை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் 15 சதவீதம் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 5 சதவீதம் கொடைக்கானல், நீலகிரி ஊட்டி போன்ற மலை பிரதேசங்களில் 15 சதவீதமும் கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக கட்டிடத்தின் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

"ஒரே நாடு; அனைத்துப் பணிகளுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு” - மோடி அரசின் அமைச்சரவை ஒப்புதல்!

 

மத்திய மாநில அரசுப் பணிகளுக்கும், வங்கி தேர்வுகளுக்கும் பொது நுழைத் தேர்வினை மத்திய அரசு அமல்படுத்துகிறது.

மத்திய மாநில அரசுப் பணிகளுக்கும், வங்கி தேர்வுகளுக்கும் பொது நுழைத் தேர்வினை மத்திய அரசு அமல்படுத்துகிறது. இதற்கான ஒப்புதல் பிரதமர் தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவேடேகர், ஜிதேந்திர சிங் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கினர்.

ரயில்வே பணியாளர் தேர்வு, வங்கி பணியாளர் தேர்வு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆகியவற்றிற்கு முதல் கட்டமாக ஒரே நுழைவுத் தேர்வினை ஆன்லைன் மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் தேர்ச்சி பெறுகிறவர்கள் அடுத்த கட்ட தேர்வுக்குச் செல்லலாம். இந்த தேர்வு 12 மொழிகளில் நடத்தப்படும். இந்த நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை மூன்று ஆண்டுகளுக்கு மாணவர்கள் பயன்படுத்தி அடுத்த கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

அரசு, வங்கிப் பணிகளுக்கு தனித்தனியாக தேர்வு நடத்தும்போது பலமுறை தேர்வுக் கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை மாணவர்கள் சந்திக்கின்றனர். ஒரே தேர்வு என்பதால், பணம், காலவிரயம் தவிர்க்கப்படும். எனவேதான் புதிய நடைமுறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் முறைகேடுகளும் தடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இந்த தேர்வினை மாநில அரசுகளும் அரசுப் பணியாளர்கள் தேர்வுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இதற்காக தேசிய பணியாளர் தேர்வு முகமை டெல்லியை மையமாக கொண்டு அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

வங்கிக்கடன் தவணையை செலுத்த கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு - ஐகோர்ட்டில் ரிசர்வ் வங்கி தகவல்

 
 

கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக கடன் தவணை மற்றும் வட்டியை செலுத்த இந்திய ரிசர்வ் வங்கி 6 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது. ஆனால் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் கொடுத்த சிறு கடன் நிறுவனங்கள் கடன் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டுமென கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரான சுகந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். ரிசர்வ் வங்கி உத்தரவிற்கு முரணாக கடனை வசூலிக்கும் சிறு கடன் நிறுவனங்களுக்கு எதிராக மகளிர் சுய உதவி குழுக்கள் அளிக்கும் புகார்களை பெற மாவட்ட வாரியாக தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

கடன் தொகை மற்றும் வட்டியை செலுத்துவதற்கான காலக்கெடுவை செப்டம்பர் முதல் 2021 பிப்ரவரி வரை நீட்டிக்க வேண்டுமென தமிழக அரசுக்கும், ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனருக்கும் உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வங்கிகள் மீதான புகார்களை விசாரிக்க ஏற்கனவே மாவட்டம்தோறும் ஆம்புட்ஸ்மேன் என்ற அதிகாரிகள் உள்ளதாக குறிப்பிட்டார்.

கடன் தவணை மற்றும் வட்டி செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது அரசினுடைய கொள்கை முடிவு என்றும் அதேவேளையில் மேலும் காலஅவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு (moratorium) உள்ளதாகவும் அது தொடர்பான குழு ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 
FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

ஸ்டெர்லைட் வழக்கு: ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

 

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி ஆலை நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருந்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. அதன்படி, ஆலையைத் திறக்கக்கோரி தொடர்ந்த மனுதாரரின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

    முன்னதாக, ஆலையைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியர் பாத்திமா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை மாநில இளைஞர் அணி அமைப்பாளர் தெர்மல் சொ.ராஜா, மக்கள் அதிகாரம் அமைப்பு உள்ளிட்ட பலர் வழக்குத் தொடர்ந்திருந்தனர். 

    இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்புக்கு எதிராக தில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என வேதாந்தா நிறுவனம் தெரிவித்திருந்தது. 

    இதையடுத்து, எதிர் தரப்பான, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. தங்கள் முடிவை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

சென்னைக்கு வருபவர்களை தனிமைப்படுத்த மாநகராட்சி உத்தரவு!

 
சென்னை-19,
    சென்னைக்கு வருபவர்களை தனிமைப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், பெருநகர் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 7,8,10,11 மற்றும் 13 ஆகிய மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.
 
   இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங் கூறுகையில், தமிழக முதல்வரின் ஆலோசனையின்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள், வீடுகள்தோறும் சென்று கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களை கண்டறிதல், கொரோனா தொற்று பரிசோதனைகளை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் தொற்று உள்ள நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
 மேலும் இவர்களோடு தொடர்பில் இருந்த நபர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இதனால் சமீபகாலமாக சென்னையில் வைரஸ் தொற்று பரவுதல் வெகுவாக குறைந்துள்ளது. தற்போது பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அதே நேரத்தில் வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் வகையிலும் பல்வேறு தளர்வுகளை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி அவசரத் தேவைக்காக வழங்கப்பட்டு வந்த அனுமதி எளிமையாக்கப்பட்டு தகுந்த காரணங்கள் இருப்பின் உடனடியாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி வருங்காலங்களில் சென்னையை நோக்கி வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். குறிப்பாக நேற்று ஒரு நாளில் மட்டும் 18,853 மனுக்கள் பெறப்பட்டு அதில் 18,823 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 
     இந்த பயண அனுமதி பெற்று வரும் நபர்களை கண்காணித்து அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக தொழிற்சாலை மற்றும் இதர அலுவலகங்களின் வேலை காரணமாக வரும் நபர்களின் தகவல்களை அந்தந்த மண்டல அலவலர்கள் சேகரித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலங்களில் வியாபார ரீதியாக வெளிமாவட்டங்களுக்கு சென்று வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். 
 
    அதே போன்று அம்பத்தூர் மண்டலம், கிண்டி தொழிற்பேட்டை அமைந்துள்ள அடையாறு மண்டலம் ஆகியவற்றில் தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதால் வெளிமாநில தொழிலாளர்கள் வருகையும் அதிகரிக்கும். இது தொடர்பான தகவல்களையும் சேகரித்து அவர்களையும் முறையாக தனிமைப்படுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு : கட்சிகள் வரவேற்பு

 

சென்னை : 'ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கட்சி தலைவர்கள் ஸ்டாலின், வைகோ, ராமதாஸ், அழகிரி மற்றும் கமல் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.


 

ஸ்டாலின் அறிக்கை: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இது மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மனித குலத்தை காப்பாற்றிடும் தீர்ப்பு.அமைச்சரவையை முதல்வர் பழனிசாமி கூட்ட வேண்டும். அதில் உயர் நீதிமன்றத்தின் முழு தீர்ப்பையும் வரவேற்று தீர்மானமாக வெளியிட வேண்டும்.

மக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வெளிவந்துள்ளது. இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி ஸ்டெர்லைட் ஆலை மூடுவதை அமைச்சரவையில் தீர்மானமாக கொண்டு வந்து அதை சட்டமாகவே பிறப்பிக்க வேண்டும். ஆலை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் தமிழக அரசை கேட்காமல்தடை ஏதும் விதிக்கப்படாமல் இருக்க உச்ச நீதிமன்றத்தில் உடனே கேவியட் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்.


ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ: ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற தீர்ப்பு ம.தி.மு.க.வின் 26 ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. துளியளவும் சமரசத்திற்கு இடம் கொடுக்காமல் உயர் நீதிமன்றத்திலும் தீர்ப்பாயத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் நானே வாதங்களை எடுத்து வைத்துள்ளேன். இது நீதிக்கு கிடைத்த வெற்றி; மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.


 

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்: உயர் நீதிமன்ற தீர்ப்பு முக்கிய மைல் கல். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்டைர்லைட் நிர்வாகம் மேல்முறையீடு செய்யும்.அங்கு மிகவும் வலிமையான வாதங்களை முன்வைத்து அழிவை ஏற்படுத்தும் ஆலை நிரந்தரமாக மூடப்படுவதையும் ஆலையின் கட்டமைப்புகள் அகற்றப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

 

தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி: ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணை செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம்.இந்த தீர்ப்பு அப்பகுதி மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றியை நிரந்தரமாக்குகிற வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

 

மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்: மக்களின் வலிமையான குரலுக்கு முன்னால் வல்லரசுகளும் தலைவணங்கியே ஆக வேண்டும் என்பதை நீதிமன்றம் மீண்டும் ஒரு முறை தன் சிறப்புமிகு தீர்ப்பால் அனைவருக்கும் அறிவுறுத்தியிருக்கிறது. 'ஸ்டெர்லைட்' போராட்ட களத்தில் திரண்ட பொதுமக்களுக்கும் அரசின் அடக்குமுறையில் உயிரிழந்தவர்களுக்கும் மரியாதை செலுத்த வேண்டிய நேரம் இது. போராட்ட களத்தில் நிற்க எனக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றிகள். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

 

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை - திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்.

 

 
 
திருப்பத்தூர்.-19.
    24.08.2020 அன்று திருப்பத்தூர் மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் வருகை தர உள்ளார் என்ற தகவல் வெளியான நிலையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்கு நாளை (20.08.2020) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. 

    இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வளர்ச்சிப் பணிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டிட திட்ட அறிக்கை, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் கட்டிடங்கள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் சிவன்அருள், மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் வணிக வரி, பத்திர பதிவுத் துறை அமைச்சர் கே. சி. வீரமணி ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் செய்தியாளருக்கு பேட்டியளித்த அமைச்சர் ''திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மாவட்டங்கள் இன்னும்  ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் ஆகவே செயல்படுவதால் வேலூர் மாவட்டத்திலேயே மூன்று மாவட்டங்களின் வளர்ச்சி பணி குறித்து ஆய்வு நடத்த உள்ளதாக தெரிவித்தார். உடன் மாவட்ட ஆட்சியர் சிவன்அருள் உட்பட பலர் இருந்தனர். 

 


FOLLOW US OUR SOCIAL MEDIAS