Wednesday, August 19, 2020

ஸ்டெர்லைட் வழக்கு: ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

 

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி ஆலை நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருந்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. அதன்படி, ஆலையைத் திறக்கக்கோரி தொடர்ந்த மனுதாரரின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

    முன்னதாக, ஆலையைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியர் பாத்திமா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை மாநில இளைஞர் அணி அமைப்பாளர் தெர்மல் சொ.ராஜா, மக்கள் அதிகாரம் அமைப்பு உள்ளிட்ட பலர் வழக்குத் தொடர்ந்திருந்தனர். 

    இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்புக்கு எதிராக தில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என வேதாந்தா நிறுவனம் தெரிவித்திருந்தது. 

    இதையடுத்து, எதிர் தரப்பான, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. தங்கள் முடிவை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

No comments:

Post a Comment