![]() |
| கோப்பு படம் |
Pages - Menu
Translate
Wednesday, August 5, 2020
திருப்பத்தூர் அருகே ஓய்வு பெற்ற உயர் கல்வித் துறை இயக்குநர் வெட்டிகொலை.
தமிழகம் முழுவதும் எஸ் டி பி ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு தெரிவித்து தமிழகம் முழுவதும் எஸ் டி பி ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
கண்பார்வையற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்.
தங்கத்தின் விலை ஏன் உயர்ந்து கொண்டே இருக்கிறது?
உலகளவில் தங்கம் இறக்குமதி செய்வதில் இந்தியாவும் சீனாவுமே மாறி மாறி முதலிடம் வகிக்கிறது. இந்தியாவை பொருத்தவரை கடந்த ஆண்டு சுமார் 900 டன் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளதாக தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். வளர்ந்த நாடுகளின் தேவையை விட, வளர்ந்துவரும் நாடான இந்தியா தங்கத்தை அதிகமாக இறக்குமதி செய்வதற்கான காரணம், வளர்ந்த நாடுகள் தங்கத்தை முதலீட்டு பொருளாக பார்ப்பதும், இந்தியர்கள் ஆபரணமாக பார்ப்பதுமே காரணம் என்கின்றனர் தங்கம் வர்த்தகர்கள். சர்வதேச அளவில் பார்க்கும்போது, இந்தியாவில் மட்டுமே தங்கத்தின் விலை இந்த அளவு உயர்ந்துள்ளது.
சுமார் 9 ஆண்டுகளுக்கு முன் ஒரு அவன்ஸ் தங்கத்தின் விலை 1950 டாலரில் இருந்து, அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை சந்தித்து இன்றும் அதே 1900 டாலருக்குள்ளாகவே தங்கம் விற்பனையாகிறது. ஆனால் 9 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் 16 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரண தங்கம், இன்று 41 ஆயிரம் ரூபாய்கு விற்பனையாகிறது.
சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயராத நிலையில் இந்தியாவில் தங்கத்தின் விலை உயர, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சியே முக்கிய காரணம்.
ராமர் கோவில் பூமி பூஜைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:அயோத்தியில் நாளை நடைபெற உள்ள ராமர் கோவில் பூமி பூஜை விழா சிறப்பாக நடைபெற தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்து மக்களின் கனவை நனவாக்கும் வகையில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமருக்கு வாழ்த்துக்கள். ராமர் கோவில் கட்டுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டதற்கு மனமார்ந்த பாராட்டுகள். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என 1992ல் ஜெயலலிதா பேசியுள்ளார். என தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் முதல் செங்கல் கொடுத்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

அயோத்தி: ராமர் கோவில் கட்டுமானப்பணிக்காக பூமி பூஜை கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று பூமி பூஜை முக்கிய கட்டத்திற்கு வந்தது. பூமி பூஜை விழாவிற்கு வந்த பிரதமர் மோடி முதல் வெள்ளி செங்கலை எடுத்துக்கொடுத்து அடிக்கல் நாட்டுவிழாவை தொடங்கி வைத்தார். இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நாளாக இது கருதப்படுகிறது. டெல்லியில் இருந்து வந்தது முதல் மீண்டும் டெல்லிக்கு திரும்பும் வரைக்கும் மாஸ்க் அணிந்தவாரே விழாவில் பங்கேற்றார் பிரதமர் மோடி.

ராமர் கோவில் கட்டுமானப்பணிக்காக கோடிக்கணக்கான ராம பக்தர்கள் ராம் என்று பெயர் பொறிக்கப்பட்ட செங்கற்களை அனுப்பியுள்ளனர். இந்த செங்கற்கள் அனைத்தும் ராமர் கோவில் கட்டுமானப்பணிக்காக பல ஆண்டுகளாக தவம் இருக்கின்றனர். வசதி படைத்த பக்தர்கள், நிறுவனங்கள், மடலாயங்களில் இருந்து தங்கம், வெள்ளி, செங்கற்கள் கிலோ கணக்கில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குஜராத் அகமதாபாத் ஜெயின் சமூக மக்கள் இணைந்து ராமர் கோவில் கட்டுமானப்பணிக்காக 40 கிலோ வெள்ளி செங்கற்களை அனுப்பியுள்ளனர். இந்த செங்கற்களை ஆர்எஸ்எஸ், விஎச்பி பிரதிநிதிகளிடம் ஜெயின் சமூகத்தினர் வழங்கியுள்ளனர். இந்த செங்கற்களில் ஒன்றினை பிரதமர் மோடி எடுத்துக்கொடுத்து அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார்.
ராமர் கோவிலுக்கு வருவதற்கு முன்பு பிரதமர் மோடி அனுமான் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். பின்னர் குழந்தை ராமரை வழிபட்ட மோடி நெடுஞ்சான்கிடையாக விழுந்து வணங்கினார் மோடி அதன் பின்னர் ஆரத்தி காட்டி வணங்கினார். இதனையடுத்து ராம ஜென்ம பூமியில் மரக்கன்றை நட்டு வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அரைமணிநேரம் நடைபெற்ற யாக நிகழ்ச்சிகளுக்குப் பிறகு பூமி பூஜை நடைபெற்றது. யாகத்தில் பங்கேற்ற மோடி மந்திரங்களை கூறி சிறப்பு வழிபாடு நடத்தினார். ஜெய் ஸ்ரீராம் முழக்கத்திற்கு இடையே முதல் வெள்ளி செங்கலை எடுத்து கொடுத்தார் பிரதமர் மோடி. இந்த விழாவில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்தி பென், உள்ளிட்ட சிலர் மட்டுமே பங்கேற்றிருந்தனர்.
வரலாற்று சிறப்பு மிக்க ராம ஜென்ம பூமி பூஜை விழா இன்று நடைபெற்ற முன்னிட்டு அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டது.
பூமி
பூஜை விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வருகை
காரணமாக அயோத்தி நகரத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழா
நிகழ்ச்சியில் குறைவான நபர்களே பங்கேற்றனர்.
Tuesday, August 4, 2020
வரும் 10-ந்தேதி தமிழகம் முழுவதும் காய்கறி, பூ மார்க்கெட் மூடல்
இந்த கூட்டத்தில் வரும் 10-ந்தேதி தமிழகம் முழுவதும் உள்ள காய்கறி, பூ மார்க்கெட்டுகளை மூட வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தி வரும் 10-ந்தேதி தமிழகம் முழுவதும் உள்ள காய்கறி, பூ மார்க்கெட்டுகள் மூடப்படுகிறது. திருமழிசையில் உள்ள தற்காலிக காய்கறி சந்தையில் போதிய வசதிகள் இல்லை என வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வரும் திங்கட்கிழமை அன்று அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.










