
Pages - Menu
Translate
Wednesday, October 7, 2020
ஆலங்காயம் சமுதாய சுகாதார நிலையத்தில் இணை இயக்குநர்(தடுப்பூசிகள்) திடீர் ஆய்வு:

25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை கோரும் விண்ணப்பப் படிவம். கல்வித்துறை இணையத்தில் வெளியிட்டுள்ளது
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 பிரிவு 12(1) (C) இன்படி அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை கோரும் விண்ணப்பப் படிவம்.
கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 12 (1) C இன் படி அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்பில் 25 % தமிழக அரசு இட ஒதுக்கீட்டடின் கீழ் இலவச LKG கல்வி இட ஒதுக்கீட்டின் கீழ் #ஆன்லைனில் மீண்டும் ஒரு வாய்ப்பு இலவசமாக #விண்ணப்பிக்க 12-10-2020 முதல் 07-11-2020 #வரை மீதமுள்ள இடங்களுக்கு மீண்டும் சேர்க்கை கோரும் விண்ணப்ப படிவம் 32 மாவட்டங்களில் உள்ள 8943 பிரைமரி, மெட்ரிக்குலேசன் மற்றும் நர்சரி தனியார் பள்ளிகளில் 141000 எல்கேஜி அல்லது முதல் வகுப்புக்கான இலவச இடங்கள் கல்வித்துறை இணையத்தில் வெளியிட்டுள்ளது.
http://tnmatricschools.com/rte/rtehome.aspx
தேவையான #ஆவணங்கள்:-
1. குழந்தையின் பிறப்பு சான்று
2. சாதிசான்று, வருமான சான்று
3. குழந்தை ஆதார் அட்டை
4. தந்தை ஆதார் அட்டை
5. குழந்தையின் புகைப்படம்
மேற்கண்ட அசல் ஆவணங்கள் எடுத்துவரவும். அனைத்து ஆவணங்களையும் ஸ்கேன் செய்து ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் உடனே திருப்பி அளிக்கப்படும்.
LKG-யில் 25% இலவச இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற்றுவிட்டால் 8-ம் வகுப்பு வரை இலவச கல்வி பயிலலாம்.
நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும், 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்-வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு
Wednesday, September 9, 2020
திருப்பத்தூர் பகுதியில் தொடர்ந்து திருட்டு. 11 பேர் கொண்ட கும்பல் கைது.
திருப்பத்தூர் பகுதியில் தொடர்ந்து திருட்டு. 11 பேர் கொண்ட கும்பல் கைது.


30 செல்போன் மற்றும் 1 லட்சம் பணம் பறிமுதல்.
திருப்பத்தூர் டார்லிங் டிவி ஷோ ரூமில் கடந்த 3.9.2020 அன்று நள்ளிரவு கடையின் ஷட்டரை உடைத்து லேப்டாப், மொபைல்கள் மற்றும் பணம் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் சதீஷ், மாதேஷ், ராகவேந்திரன், வீரமணி, விஷ்வா, விக்ரம், சுதாகர், குணா, வில்வநாதன், கோவிந்தராஜ், நித்தியானந்தம் உள்ளிட்ட 11 நபர்களை கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் இவ்வழக்கில் வேறு எவருக்கும் தொடர்பு இருக்கின்றதா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறது காவல்துறை.
மேலும் இவர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
சுமார் 10 லட்சம் அளவில் கொள்ளை அடித்து இருப்பதாக இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதில் கோவிந்தராஜ், நித்தியானந்தம் ஆகிய இருவரும் செய்தியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
மேலும் குற்றவாளிகளிடம் இருந்து ஒரு லட்சம் பணமும் 30 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றி விவரம் தெரிந்தால் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக உதவி எண் 9442992526 க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தெரிவித்து உள்ளார்.


Friday, September 4, 2020
16-ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு.

திருப்பத்தூர் அடுத்த செலந்தம்பள்ளி கிராமத்தில் விவசாய நிலத்தில் கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் க.மோகன்காந்தி, லெமூரியா திட்ட மாநிலத் துணை ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஆய்வுக் குழுவினர் திருப்பத்தூர் தாலுக்காவுக்கு உட்பட்ட மடவாளம் அடுத்த செலந்தம்பள்ளி கிராமத்தில் கள ஆய்வில் ஈடுபட்டபோது நடுக்கல் ஒன்றும், உடன்கட்டை நடுக்கல் ஒன்றும் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து பேராசிரியர் க.மோகன்காந்தி கூறுகையில், "திருப்பத்தூர் அடுத்த மடவாளம் செலந்தம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அரங்கதிருமால், பிரபு மற்றும் வேலு ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில் அந்தக் கிராமத்தில் கள ஆய்வு நடத்தினோம். இதில், அந்தக் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையின் மேற்குப் பகுதியில், விவசாயி வில்வநாதன் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் 2 நடுகற்கள் இருப்பதைக் கண்டறிந்தோம்.
கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல்லானது 2.5 அடி உயரமும், 1.5 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இக்கல்லில் வீரனின் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், உடன்கட்டை நடுகல் ஒன்றும் அங்கு உள்ளது. இக்கல்லானது 2 அடி உயரமும், 1 அடி அகலமும் கொண்டதாக உள்ளது.
பண்டைய காலம் தொட்டே தமிழகத்தில் நீதி வழங்கும் முறைகளும் குற்றங்களுக்கு ஏற்ப தண்டனை வழங்கும் முறைகளும் வழக்கத்தில் இருந்துள்ளன. குற்றங்கள் புரியும் மனிதர்களுக்கு அவர்களின் குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.
பெருங்குற்றம் செய்தவர்களுக்கு மரண தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளன. ஒருவரைக் கொடூரமாகக் கொல்லும் தண்டனை 'கழுவேற்றம்' என்பதாகும். அதாவது, மரக்கட்டையை நட்டுவைத்து அதில் கூர்மையான முனையை ஏற்படுத்தி, பிறகு தண்டனைக்கு உரியவர்கள் கூர்மையான முனையில் அமர்த்தப்படுவர்.
அந்தக் கூர்மையான முனை தண்டனைக்கு உரியவரின் ஆசனவாயில் சென்று பொருந்தும். இதனால், தண்டனை பெறுவோர் உயிர் சிறிது, சிறிதாகப் பிரியும். இறந்து போன மனிதனின் உடலை அப்படியே விட்டுவிடுவார்கள். பிறகு விலங்குகள், பறவைகள் அந்த மனித உடலைத் தின்றுவிடும். இத்தகைய கொடிய தண்டனையே 'கழுவேற்றம்' என அந்தக் காலத்தில் அழைக்கப்பட்டது.
அத்தகைய கழுவேற்ற நடுகல் வகையே செலந்தம்பள்ளியில் நடுகல்லாக கிடைத்துள்ளது. மரக்கட்டையில் மேலாக கழுவேற்றப்பட்ட வீரன் அமர்ந்துள்ளார். பெரிய மேல்கொண்டை, காதுகளில் நீண்ட குண்டலங்கள், கழுத்தில் ஆபரணங்கள், வலது கையை தூக்கி அபய (ஆசீர்வதித்தல்) முத்திரையும், இடது கையை இடது கால் தொடை மீது வீரன் வைத்துள்ளார். அந்த கையில் கத்தி ஒன்றும் உள்ளது. 2 கால்களும் தொங்கவிடப்பட்டுள்ளன. கால்களில் வீரக்கழல்களும், கைகளில் கடங்களும் அணிந்துள்ளார்.
வீரனின் அருகே, உடன்கட்டை ஏறிய பெண் ஒருவர் உருவமும் உள்ளது. அவளது காதுகளில் நீண்ட காதணிகள், வலது கை தொங்கவிடப்பட்டுள்ளது. இடது கையில் மலர் போன்ற முத்திரையும் காணப்படுகிறது. இந்தப் பெண் கழுவேற்றப்பட்ட வீரனின் மனைவியாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
தன் கணவனை பகைவர்கள் கொன்றுவிட வீரனின் மனைவியும் அவரோடு சேர்ந்து உடன்கட்டை ஏறி இறந்துபோனதால் வீரனின் மனைவிக்கும் நடுகல் வைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
கழுவேற்றத் தண்டனைக்கு உரியோருக்கும் அவனோடு இறந்துபோன வீரனின் மனைவிக்கும் நடுகற்களை அந்தக் கால மக்கள் வைத்துள்ளனர் என்பதை ஆராயும்போது, இந்த வீரன் தவறு செய்து, அதற்கான தண்டனையைப் பெற்று இறந்தவன் போலத் தெரியவில்லை. ஊருக்காகப்போராடி பகைவர்களால் கொல்லப்பட்டவனாக இருக்கலாம் எனத் தெரிகிறது. அதன் காரணமாக அவரது மனைவியும் அவரோடு சேர்ந்து உடன்கட்டை ஏறியிருக்கலாம்.
இந்த 2 நடுகற்களும் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்படுத்தி உள்ளனர். இதுபோன்ற வரலாற்று ஆவணங்களை மாவட்டத் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, அவற்றை ஆவணப்படுத்த முன்வர வேண்டும்" என்றார்.
திருப்பத்தூரில் பிரபல டி. வி. ஷோ ரூமில் கொள்ளை
திருப்பத்தூர் வாணியம்பாடி ரோடில் தூயநெஞ்சக் கல்லூரி வணிக வளாகத்தில் டார்லிங் ஷோரூம் இயங்கி வருகிறது.
நேற்று இரவு சுமார் 1 மணியளவில் பூட்டை உடைத்து கொள்ளை அடித்துள்ளனர். சி சி டிவி கேமராவை உடைத்து எடுத்து சென்றுள்ளனர்.
லேப்டாப், மொபைல்கள் காணவில்லை. மேலும் என்னென்ன பொருட்கள் திருடு போயுள்ளது என்ற விபரம் இன்னும் முழுமையாக தெரியவில்லை.
தகவல் அறிந்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





Thursday, September 3, 2020
தமிழகத்தில் வருகிற 7ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை.

தமிழகத்தில் மாவட்டங்களுக்குள் மட்டும் பொது போக்குவரத்து கடந்த 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்திற்கு அனுமதி அளித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதன்படி, வருகிற 7ஆம் தேதி முதல் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை தொடங்க உள்ளது.
மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு முக்கிய பணி மற்றும் வியாபார நிமித்தமாக சென்று வர, பொதுமக்களிடமிருந்து வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பொதுமக்கள் கொரோனா முன்னெச்சரிக்கைகளை பின்பற்றி, பாதுகாப்பான முறையில் பயணங்களை மேற்கொள்ளுமாறு தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.
ஐந்தரை மாதங்களுக்குப் பின், மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை தொடங்கப்படுவதால், அதிகளவில் பயணிகள் போக்குவரத்து நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. பணி நிமித்தமாகவும், வர்த்தக ரீதியாகவும் இனி வெளியூர்களுக்கு செல்வதில் எந்த சிரமமும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.




