Thursday, April 14, 2022

தமிழ் புத்தாண்டு பலன்கள் 2022

 தமிழ் புத்தாண்டான சுபகிருது வருடம் 2022 சித்திரை 1-ம் தேதி அதாவது வியாழக்கிழமை அன்று ஆரம்பமாகிறது. சுபகிருது ஆண்டு தொடக்க கிரக நிலையானது மேஷத்தில் சூரியன், ராகு, புதன், கன்னியில் சந்திரன், துலாம் ராசியில் கேது, மகரத்தில் சனி, கும்பத்தில் செவ்வாய், சுக்கிரன், மீனத்தில் குரு என அமைந்திருக்கத் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. புத்தாண்டு பிறந்தாலே இந்த ஆண்டு நம்முடைய ராசிக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்க போகிறது என்று ஆர்வமாக இருப்போம். அந்த வகையில் உங்களுடைய ஒவ்வொரு ராசிகளுக்கும் இந்த பதிவில் தமிழ் புத்தாண்டுக்கான பலன்கள் பற்றி படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..

 

மேஷ ராசி:

மேஷ ராசிக்காரர்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும் சாதுர்யமும் இருந்தால் வெற்றி பாதையை நோக்கி செல்லலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒன்றாக இணைந்து செயல்படுவீர்கள். உங்களுடைய கருத்துகளுக்கு குடும்பத்தில் மதிப்பு அதிகரித்து காணப்படும். பொருளாதார ரீதியாக சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும் தன்னம்பிக்கையுடன் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும். தொழில், வியாபாரம், உத்தியோகம் போன்றவற்றில் லாபகரமான பலன்கள் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கு வாய்ப்புள்ளது. உடல் நலனில் அவ்வப்போது பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கும். தேவையில்லாத மருத்துவ செலவுகளை தவிர்க்க ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இந்த வருடம் குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு கண்டிப்பாக சுப பலன்கள் கிடைக்கும்.
 
பரிகாரம்: குரு வழிபாடு செய்வது சிறந்த பலன்களை கொடுக்கும். வியாழன்கிழமை தோறும் குரு தட்சிணாமூர்த்திக்கு குடும்ப பெயரில் அர்ச்சனை செய்து வாருங்கள்.
 
 

ரிஷப ராசி

வீண் சண்டைக்கு போக மாட்டேன் வந்த சண்டையை விட மாட்டேன் என்று இருக்கும் ரிஷப ராசியினருக்கு இந்த வருடம் உங்களுடைய வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ போகிறது. குடும்பத்தை பொறுத்தவரை மகிழ்ச்சியான சூழல் நடக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் அவ்வப்போது ஒன்றாக சேர்ந்து குல தெய்வ கோவிலுக்கு சென்று வருதல் வேண்டும். பொருளாதார ரீதியாக பணம் பல வழிகளிலிருந்து உங்களுக்கு வந்தடையும். ஒன்பதாம் வீட்டில் சனி பகவான் சஞ்சாரம் செய்யும் பொழுது ஆடை, ஆபரணங்கள், வீடு, வாகனம் போன்ற யோகம் கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த அனைத்து குறைகளும் படிப்படியாக குறைந்து காணப்படும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.

பரிகாரம்: வியாழன் மற்றும் சனிக்கிழமையில் குரு, சனி வழிபாடு தொடர்ந்து செய்து வர சகல பாக்கியங்களும் உண்டாகும். திடீர் அதிர்ஷ்டம் பெற மாற்றுத் திறனாளிகளுக்கு முடிந்த உதவிகளை செய்து வாருங்கள்.

 

மிதுன ராசி:

கடமையே கண் கண்ட தெய்வம் என்று கூறும் மிதுன ராசிக்காரர்களுக்கு இதுவரை பல பிரச்சனைகளை சந்தித்து வந்த உங்களுக்கு இனி வர கூடிய ஆண்டு உங்களுக்கு சிறப்பாக அமைய போகிறது. என்னடா இது வாழ்க்கை என்று நினைத்தவர்களுக்கு வாழ்வில் திடீர் மாற்றங்கள் நடக்கப்போகிறது. குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக பல புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். அக்டோபர், நவம்பர் மாதத்தில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். வெளியில் கொடுத்த அனைத்து கடன் பாக்கிகளும் மொத்தமாக வசூலாகும். ஆரோக்கியம் பொறுத்தவரை சில உபாதைகளை சந்திக்கலாம். கணவன் மனைவிக்குள் இதுவரை இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி நல்ல புரிதல் உணர்வு காணப்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு கூடிய விரைவில் திருமண வாய்ப்புகள் நிகழும்.

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் சனி வழிபாடு செய்து வாருங்கள். காக்கைக்கு எள் சோறு வையுங்கள்.

 

கடகம் ராசி:

அதிக கஷ்டங்களை அனுபவித்து வந்த நிலையில் இந்த ஆண்டு மனதில் ஆறுதல் கிடைக்கும் ஆண்டாக மாறப்போகிறது. குடும்பத்தில் அமைதியான சூழல் காணப்படும். திடீர் நன்மைகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் செலவிற்கு ஏற்ப வரவு வந்து சேரும். பணத்தை கையாளும் போது கவனமாக இருக்கவும். உங்களுடைய கடின உழைப்பால் இந்த ஆண்டு கடக ராசியினருக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியம் பொறுத்தவரை ஆண்டின் ஆரம்ப காலத்தில் குருவின் தாக்கம் இருந்தாலும் நாளடைவில் அவை குறைய தொடங்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு பெற்றோர்கள் சம்மதத்துடன் மனதிற்கு பிடித்தவர்களை மணமுடிக்கும் யோகம் கிடைக்கும்.

பரிகாரம்: தடைகள் அனைத்தும் விலக விநாயகரை வழிப்படுவது நல்லது. அதுமட்டுமல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு தானியங்களை தானமாக வழங்கி வரலாம்.

 

சிம்மம் ராசி:

இந்த ஆண்டு சிம்ம ராசியினருக்கு மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்கும் ஆண்டாக அமைய போகிறது. எப்போதும் ஏதாவது ஒரு தடைகளையும், கஷ்டங்களையும் சந்தித்துக் கொண்டிருந்த உங்களுடைய வாழ்க்கையில் அவை படிப்படியாக குறைந்து ஏற்றமான ஒரு நல்ல சூழ்நிலை அமைய இருக்கிறது. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள், சண்டை சச்சரவுகள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வரும். பொருளாதாரத்தை பொறுத்தவரை இனிமையான பலன்கள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். புதிதாக எடுக்கும் முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும். இதுவரை இருந்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகள் அனைத்தும் குறைந்து காணப்படும். ரத்த காயங்கள், வெட்டு காயங்கள் போன்றவை அடிக்கடி ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் வெளியிட பயணங்களின் போது கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரித்து காணப்படும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் துளசியால் பெருமாளுக்கு அர்ச்சனையும், திங்கட்கிழமையில் வில்வத்தால் சிவனுக்கு அர்ச்சனையும் செய்து வந்தால் ஏற்றம் காணலாம். தடைகள் நீங்கி அதிர்ஷ்டம் பெற இயலாதவர்களுக்கு வஸ்திர தானம் செய்யலாம்.

 

கன்னி ராசி:

கன்னி ராசியினருக்கு குடும்ப சூழலை பொறுத்தவரை ஏற்ற இறக்கமான பலன்கள் காணப்படும். குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதற்கான தீர்வுகளும் கிடைத்துவிடும். எதிர்கால வாழ்க்கைக்கு திட்டமிட்டு செயல்படுவது நல்லது.  பொருளாதாரத்தை பொறுத்தவரை நல்ல வளர்ச்சி காணப்படும். இதற்கு தாய் தந்தையரின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களுடைய திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஏங்குபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வந்தடையும். ஆரோக்கியத்தில் அதிக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் தங்களை சுத்தி சுகாதாரம் பேணி காப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த அனைத்து பிரச்சனைகளும் நல்ல தீர்வினை கொடுக்கும். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

பரிகாரம்: ஏற்ற இறக்க பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளதால் நவகிரக தோஷ வழிபாடுகளை மேற்கொள்ளுதல் சிறந்தது. குறிப்பாக சூரிய பகவானை வழிபட்டு வாருங்கள் நன்மைகள் பெறலாம்.

 

துலாம் ராசி:

குடும்பத்தை பொறுத்தவரை அனைத்து பிரச்சனைகளும் படிப்படியாக குறைய தொடங்கும். வீட்டில் சுப காரியம் நடப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. கல்வி பயிலும் மாணவர்களுக்கு திறமைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். பொருளாதாரத்தில் வீண் செலவுகளை குறைத்துக்கொண்டு திட்டமிட்டு செயல்பட வேண்டும். அவ்வப்போது திடீர் அதிர்ஷ்டங்களும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வாகனத்தில் வெளியில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தை பொறுத்தவராயி சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குழந்தை வரம் கேட்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். கணவன் மனைவிக்குள் புரிதல் உணர்வு அதிகரித்து காணப்படும்.

பரிகாரம்: வாழ்க்கையில் ஏற்றம் காண பவுர்ணமி நாட்களில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். கடன் தொல்லைகள் அனைத்தும் விலக கால பைரவரை வழிபாடு செய்யலாம்.

 

விருச்சிகம் ராசி:

எந்த ஒரு விஷயத்தையும் அவசரப்படாமல் பொறுமையாக செய்யும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு நல்ல பலன்கள் கைக்கூடி வரும். கடன் தொல்லை, முதலீடு இழப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். குருவின் அருளால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். வாழ்க்கை துணை இருவருக்கும் இருந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கும். விலை அதிகம் உள்ள பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். பணத்தை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். தொழில், வியாபாரம், உத்தியோகம் போன்றவற்றில் அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய முதலீடு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை சுமாராகத்தான் பலன்கள் காணப்படும். அடிக்கடி உடல் நிலையில் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் பெரிதாக எந்த பாதிப்புகளும் உண்டாகாது. புதிதாக திருமணமானவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ள முயற்சி செய்வது நல்லது.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வந்தால் தடைகள் அனைத்தும் நீங்கும்.

 

தனுசு ராசி:

ஒரு பிரச்சனை போனால் இன்னொரு பிரச்சனை வந்துக்கொண்டு இருந்த நிலையில் அதற்கு மாறாக இந்த ஆண்டு அமைய போகிறது. குடும்பத்தில் திடீர் நிகழ்வுகள் நடைபெறும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த குழப்பங்கள் அனைத்தும் தீரும். இதுவரை உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்துகொள்வதற்கு முயற்சி செய்வார்கள். பொருளாதாரத்தில் இதுவரை மந்த நிலையில் இருந்த வருமானம் உங்களுக்கு சுறுசுறுப்பாக இருக்கிறது. செலவுகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்ற வருமானம் ஈட்டக்கூடிய இடங்களில் இருப்பவர்கள் அனுகூலமான பலன்களைக் காண இருக்கிறீர்கள். வாடகை இடத்திலிருந்து, சொந்த இடத்திற்கு தொழிலில் மாற்றம் உண்டாக வாய்ப்புகள் அமையும். மற்றவர்களிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி பாராட்டுகளை பெறுவீர்கள். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வெளியில் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மன உளைச்சல், மன இறுக்கம் போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து நீடிக்கும் என்பதால் இவ்வாண்டில் தியானம், யோகா போன்ற மன அமைதி தரும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபட்டு வாருங்கள் நல்லதே நடக்கும். துன்பங்கள் தீர ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கான உதவிகளை செய்து வாருங்கள்.

 

மகரம் ராசி:

 

மகர ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்த மந்த நிலை மாறி சுறுசுறுப்பு நிறைந்த ஆண்டாக மாறப்போகிறது. எதிலும் இதுவரை நாட்டம் இல்லாமல் இருந்த நீங்கள், இனி அனைத்தையும் கற்றுக் கொள்ளும் உத்வேகத்துடன் காணப்படுவீர்கள். மகிழ்ச்சியான சூழல் குடும்பத்தில் நிலைக்கும். சகோதர, சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீர்ந்து ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் இருக்கும் அனைவரும் உங்களுடைய முயற்சிகளுக்கு ஊக்குவிப்பார்கள். பொருளாதாரத்தில் உங்களுடைய புதிய முயற்சியில் நல்ல லாபம் கிடைக்கும். வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் வாங்குவது, விற்பது போன்ற விஷயங்களில் சாதக பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம் ஆகும். வெளியில் பயணம் செய்யும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறைய தொடங்கும். திருமணமான புதிய தம்பதிகளுக்கு இல்லற வாழ்க்கை இனிமையாக அமைய சுக்கிரன் அருள் கிடைக்கும்.

பரிகாரம்: தடைகள் நீங்கி வெற்றி பெறுவதற்கு முச்சந்தி பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கலாம். வாழ்வில் சுமுகமான பலன்கள் கிடைக்க அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்கு செல்லும் பொழுது விளக்கு ஒன்றை புதிதாக வாங்கி அதில் நெய் விட்டு தீபம் ஏற்றி வைத்து வாருங்கள்.

 

கும்பம் ராசி:

உங்களின் திறமைக்கு ஏற்ப சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்த உங்களுக்கு, இவ்வாண்டு அதற்குரிய அனுகூலமான பலன்கள் கிடைக்கக்கூடிய வகையில் 2022-ஆம் ஆண்டு அமைய இருக்கிறது. குடும்பத்தில் பெற்றோர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு எதிர்பாராத திடீர் நல்ல விஷயங்கள் குடும்பத்தில் நடக்க இருக்கிறது. கடந்த கால சேமிப்புகள், முதலீடுகள் போன்றவற்றால் இவ்வாண்டு அற்புத பலன்களை பெற இருக்கிறீர்கள். சுப காரியச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் நவீன பொருள் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரம் போன்றவற்றில் அற்புதமான பலன்கள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளரின் எண்ணிக்கை அதிகமாக கிடைக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை அதிகமாக கவனத்துடன் இருக்க வேண்டும். சுவாச பிரச்சனைகள் இருப்பின் மூச்சு பயிற்சி செய்வது நல்லது. கணவன் மனைவி இருவரும் புரிதல் உணர்வினை ஏற்படுத்திக்கொள்வீர்கள். திருமணமான புதுமண தம்பதிகளுக்கு அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளை வரம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்க இருக்கிறது.

பரிகாரம்: வருமானம் அதிகரிப்பதற்கு புதன் கிழமையில் புத பகவானை வழிபடுவது சிறப்பு. மேலும் அதிர்ஷ்டம் சேர சனிக்கிழமைகளில் தாய் அல்லது தந்தையை இழந்த ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வரலாம்.

 

மீனம் ராசி:

இந்த ஆண்டானது மீன ராசியினருக்கு தங்களுடைய தவறுகளை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை வாரி வழங்குகிறது என்று கூறலாம். ஏற்ற இறக்கமான பலன்கள் குடும்பத்தில் காணப்படும். ஆண்டின் நடுப்பகுதியில் ஒரு சிலருக்கு குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கும் சூழ்நிலை ஏற்படலாம். வாழ்க்கையில் எந்த பிரச்சனை வந்தாலும் மனம் தளராமல் இருக்க வேண்டும். தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்றவற்றில் பல சவால்களை எதிர்கொண்டு வெற்றி அடைவீர்கள். இவ்வருடம் முழுவதும் உங்களுக்கு தேவையான விஷயங்கள் கடினமான போராட்டத்திற்கு பிறகே கிடைக்கும். எதிலும் பொறுமையை கடைப்பிடித்தால் நல்ல பலன் கிடைக்கும். ஆரோக்கியத்தில் வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. உணவு கட்டுப்பாட்டில் அக்கறை தேவை. மன உளைச்சலில் இருப்பவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. கணவன் மனைவிக்குள் தேவையில்லாத சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். பல வருடமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

பரிகாரம்: தீராத நோய்களும் குணமடைய சோமவார விரதம் மேற்கொள்ளலாம். மனதில் நினைத்த காரியம் நடக்க உங்களால் முடிந்த அளவிற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி புரிவது நல்லது.

 

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

 

 

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

Tuesday, April 12, 2022

அந்த நாள் நியாபகம் வந்ததே நண்பனே! நண்பனே!! 26 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்த கல்லூரி மாணவர்கள்

அந்த நாள் நியாபகம் வந்ததே நண்பனே! நண்பனே!! 

26 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்த 

கல்லூரி மாணவர்கள்.

நெகிழ்ச்சியான தருணங்கள் ....

 

            திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் 1993-1996-ம்  ஆண்டு பயின்ற   பி.காம். கல்லூரி நண்பர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை 10.4.2022 ஸ்டே வெல் கெஸ்ட் ஹவுஸ், ஏலகிரி மலையில் நடந்தது.

    இது ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பாக இருந்தது. இதில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களும் மிகவும் மகிழ்ச்சியோடு, ஆனந்தக் கண்ணீரோடு ஒருவரை ஒருவர் கைகுலுக்கி கட்டித்தழுவி தங்களுடைய அன்பை பரிமாறிக்கொண்டனர்.

        அனைவரும் தங்களது கடந்தகால நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். அனைவரும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

நித்தமும் நாடகம்
நினைவெல்லாம் காவியம்
உயர்ந்தவன் தாழ்ந்தவன்
இல்லையே நம்மிடம்

 வா  நண்பா... வா நண்பா தோழ்களில் சாயவா
வாழ்ந்திடும் நாளெல்லாம் நான் உன்னை தாங்கவா.....

என்ற பாடல் வரிகள் நெஞ்சில் வந்து போகின்றன......


வா நண்பன் வா நண்பா தோழ்களில் சாயவா
வாழ்ந்திடும் நால்லேல்லாம் நான் உன்னை தாங்கவா

Read more at: https://deeplyrics.in/song/nalla-nanban

Follow us at: Facebook - https://www.facebook.com/deeplyrics.in/
வா நண்பன் வா நண்பா தோழ்களில் சாயவா
வாழ்ந்திடும் நால்லேல்லாம் நான் உன்னை தாங்கவா

Read more at: https://deeplyrics.in/song/nalla-nanban

Follow us at: Facebook - https://www.facebook.com/deeplyrics.in/

 


 நட்பு எவ்வளவு முக்கியமெனில் 

வாழ்நாள் முழுவதும் அருகில் இல்லை என்றாலும்..

எங்கோ இருந்து இறுதிவரை ஆறுதலுடன் அன்பாய் இருந்தாலே போதும்…

 

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

Friday, January 14, 2022

பொங்கல் பண்டிகை கட்டுரை


 

பொங்கல்

    வேளாண்மையை அடிப்படையாக கொண்ட தமிழர் தம் இறைவனான சூரியனுக்கு நன்றி சொல்ல நடத்த படும் பண்டிகையாகும் .உழவர் திருநாள் என்று போற்றப்படும் இந்த பொங்கல் பண்டிகள் நான்கு நாட்கள் நடத்த படுகிறது . போகி பொங்கல் , தை பொங்கல்,மாட்டு பொங்கல் ,காணும் பொங்கல் என நான்கு தினங்களுக்கும் தனி தனி பெயருண்டு

போகி பொங்கல்

    தமிழர்தம் பொங்கல் பண்டிகையும் முதல் நாள் விழா இதுவாகும். பழையன கழிதல் புதியன புகுதல் என்பது இத்தினத்தின் சாராம்சமாகும். தமிழர் தம் வேளாண்மை சுழற்சியின் கடைசி நாள் இதுவாகும். பண்டைய களங்களில் ஒவ்வொரு வருடத்தின் வேளாண்மை வேலைகளில் கடைசியாக செய்ய வேண்டிய மீதி பொருட்களை தீயிட்டு எரிக்கும் வேலைகள் இன்று செய்யப்பட்டன. இது மார்கழி கடைசி தினம் அனுசரிக்க படுகிறது . தற்போதைய களங்களில் வீட்டில் உள்ள பழைய பொருட்டாக்களை மாற்றும் தினமாக கடைபிடிக்க படுகிறது. போகி பண்டிகை அன்று வீட்டு மாடங்களில் காப்பு கட்டும் வழக்கமும் தொடர்ந்து கடைபிடிக்க படுகிறது .

தை பொங்கல்

பொங்கல் பண்டிகையும் பிரதான தினம் இதுவாகும் .இது இரண்டாவது பொங்கல் தினம் ஆகும் .இது குறிப்பாக தை மாதத்தின் முதல் நாள் கொண்டாட படுகிறது .இந்திய மற்றும் அல்லாமல் உலகில் உள்ள அணைத்து தரப்பினராலும் பரவலாக கொன்றாடப்படுகிறது .வருடம் முழுவதும் விளைவித்த பயிர்களை அறுவடை செய்து இத்துணை நாள் உழவர் தமக்கு உதவிய பூமிக்கு சேர்த்து பொங்கல் வைக்கும் தினமாகும் .அறுவடை முடித்து அனைவரும் சந்தோசமாக இருக்கும் மாதம் தை என்பதால் ,தை முதல் தினம் இது கடைபிடிக்க படுகிறது .அனைவரும் புத்துடை அணிந்து அனைத்து நண்பர் மற்றும் உறவினருடன் இணைந்து கொண்டாடப்படும் விழா இதுவாகும்

மாட்டு பொங்கல்

வேளாண்மைக்கு உறுதுணையாக இருக்கும் வீட்டு விலங்குகள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விழா இதுவாகும் .இது பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாள் விழாவாகும் .குறிப்பாக விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் காளை மாட்டிற்கும் இல்லத்தை செழிப்புற செய்யும் பசு மாட்டிற்கும் இடும் பொங்கல் இதுவாகும் .இன்றைய தினம் மாடுகள் வசிக்கும் இடங்களை சுத்தம் செய்து மாடுகளை குளிப்பாட்டி வர்ணம் பூசி ,உழவு கருவிகள் அனைத்தையும் வைத்து படையல் வைத்து பொங்கல் வைக்க படுகிறது.

காணும் பொங்கல்

காணும்பொங்கல் என்பது உற்றார் உறவினர் பிரிந்து சென்ற நண்பர்களை மீண்டும் கண்டு உறவை புதுப்பிக்கும் நிகழ்வாகும். இது பொங்கல் பண்டிகையின் நான்காவது தின கொண்டாட்டமாகும். இதனை கன்னி பொங்கல் ,கணுப் பொங்கல் என்றும் அழைப்பர்.தற்போதைய காலகட்டங்களில் பட்டிமன்றம் சிறு விளையாட்டு போட்டிகளை நடத்தி வேலை நிமித்தம் தனிமையாகி போன உறவினர்களை இணக்கமுற செய்ய ஒரு வாய்ப்பளிக்கிறது.

பொங்கல் வாழ்த்துக்கள்

வாழ்த்து அட்டைகள் பரிமாறி கொள்ளும் பழக்கம் தொடர்ந்து செய்யப்படுகிறது . அச்சு பதிக்க பட்ட வாழ்த்து அட்டகளுக்கு பதிலாக தற்போது குறுந்செய்திகள் பரிமாறப்படுகிறது. நாகரிக வளர்ச்சியில் தொலைதொடர்பு வளர்ந்து வருவதால் இந்த மாற்றம் உருவானாலும் ,பொங்கல் பண்டிகையின் வாழ்த்து சொல்லும் சாராம்சம் மாறவில்லை.

பொங்கல் கோலங்கள்

வட இந்தியாவின் ரங்கோலி கோலம் போன்ற வற்றை மிஞ்சும் விதமாக எத்துணை விதமாக பொங்கல் கோலம் போடா இயலுமோ அத்துணை வழிகளிலும் தமிழ் பெண்கள் பொங்கல் கோலம் போடுகின்றனர்.நாகரிக வளர்ச்சியில் அடுத்த கலாச்சாரத்தின் தாக்கம் மற்ற கலாச்சாரங்களின் மீது படிவது சாத்தியமான ஒன்றாகும் ஆனால் பொங்கல் பண்டிகை மற்ற கலாச்சாரத்தை தம்முடன் இணைத்து கொண்டு மென்மேலும் சந்தோசத்தை நமக்கு கொடுக்கிறது .இதற்க்கு சான்றாகவே விதவிதமான கோலங்களை நமது தமிழ் பெண்கள் போடுவதை தமிழ் கலாச்சாரம் ஒருபோதும் தடுப்பதில்லை .

ஜல்லிக்கட்டு – ஏறுதழுவல்

ஒவ்வொரு கலாச்சாரத்தில் வீர விளையாட்டுக்கள் தொன்று தொட்டு கடைபிடிக்க படுகின்றன ,அதன்படி வீரம் மிகுந்த தமிழ் இளைஞர்களின் வீரத்தை பறைசாற்ற ஏறுதழுவுதல் நடத்த பட்டன.வீரம் மிக்க இளைஞர்கள் காளையை அடக்கும் இந்த விளயாட்டு உலகளவில் பிரசித்தி பெற்றதாகும் .ஒவ்வொரு வருடமும் இந்த விளையாட்டை காண வரும் உலக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதாக இந்திய சுற்றுலா துறை தெரிவிக்கிறது . சில காரணங்களுக்கானக தடை பட்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழ் இளைஞர்களின் முயற்சியால் மீண்டும் நடத்த படுகிறது.பண்டைய விளையாட்டை மீட்டெடுத்தது மட்டுமல்லாமல் அகிம்சை வழியில் போராடும் இந்திய பழக்கத்தை மென்மேலும் புதிய வழிகளை கடைபிடித்து உலகம் பூராவும் உள்ள போராட வேண்டிய நிலையில் உள்ளவர்க்கு எடுத்துக்காட்டாக இருந்தது ஜல்லிக்கட்டு போராட்டம் .

 

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


 அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

Thursday, June 10, 2021

திருப்பத்தூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்றார்

 

 

மாவட்ட காவல் கண்காணப்பாளர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு கடந்த வாரம் ஆணை பிறப்பித்திருந்தது, அதனடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டத்தின் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தி IPS அவர்கள் இன்று திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

அகில இந்திய YS.ராஜசேகர் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.



    திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா சின்னமோட்டூர்  கிராம மக்களுக்கு சுமார் 60 குடும்பங்களுக்கு அரிசி காய்கறி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன மேலும் திருப்பத்தூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார். திருப்பத்தூர் மாவட்ட தலைவர் சங்கர்.  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ்  மற்றும் திருப்பத்தூர் நகர தலைவர் மணி முன்னிலையிலும். இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய பொதுச் செயலாளர் M. பாஸ்கர் மற்றும் அகில இந்திய தலைவர் கத்திப் இக்பால்  அகமது.  மாநில மகளிரணி  தலைவி திருமதி கீதா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பொருட்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர  பொறுப்பாளர்கள் மகளிர் அணி  நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் இறுதியில் அகில இந்திய பொதுச் செயலாளர் பாஸ்கர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து ஊரடங்கு காலத்தில் அவதிப்படும் அனைத்து ஏழை மக்களுக்கும் தொடர்ந்து சேவைகளை செய்து வருவோம் மேலும்  கடந்த மூன்று வருடங்களாக  எங்கள் சேவை தொடர்கிறது ஊரடங்கு காலம் மட்டுமல்லாமல் மற்ற நேரங்களிலும் ஏழை மக்களுக்கு சேவை செய்து வருகிறோம் என தெரிவித்தார்.

 

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

Saturday, May 22, 2021

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, அரசு அதிகாரிகள் சிக்கினால் டிஸ்மிஸ் - தமிழக தலைமை செயலாளர் உச்சகட்ட எச்சரிக்கை.


 
 

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு,
அரசு அதிகாரிகள் சிக்கினால் டிஸ்மிஸ் -
தமிழக தலைமை செயலாளர் உச்சகட்ட எச்சரிக்கை.


    தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்திக்குறிப்பில், அலுவலர்கள், நிறுவனங்கள் அரசுக்கும் மக்களுக்கும் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும். சில அரசு அலுவலர்கள்  சட்டத்திற்கு புறம்பான வகைகளில் செயல்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்து வருகிறது. சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையில் ஈடுபட்டால் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தவறுகளை செய்யும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது பணிநீக்கம் உட்பட துறை ரீதியான நடவடிக்கை கூட எடுக்க நேரிடும். தவறுகள் நடைபெறும் இடங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். அதிகாரிகள் நேர்மையாக பணி செய்ய வேண்டும். அரசின் இலவச சேவைகளுக்கு லஞ்சம் பெறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.அரசின் பணித்துறையில் எந்த நிலையில் பணியாற்றும் அலுவலர் இருந்தாலும், எந்த வகையான நிறுவனமாக இருந்தாலும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர்கள் மட்டுமல்லாது தனியார் துறைகளும் நேர்மையாகவும், கண்ணியமாகவும் நடக்க வேண்டும் " என்று தெரிவித்துள்ளார். 
    பொதுமக்களை அரசு அதிகாரிகளை அரசியல்வாதிகள் மிரட்டினாலோ அல்லது நலத்திட்ட உதவிகளுக்கு உதவிகோரவோ மின்னஞ்சல் Cmcell@tn.gov.in மற்றும் தலைமைச் செயலகம் தொலைபேசி எண் 044-25671764 எண் தொடர்புக் கொள்ளவும். விரைந்து நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

FOLLOW US OUR SOCIAL MEDIAS