Sunday, August 2, 2020

திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் தங்க நகை திருட்டு. போலீஸ் வலைவீச்சு.


திருப்பத்தூர்-1,

    திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர்  அடுத்த மானவள்ளி பகுதியில் வசித்துவரும் ராஜேந்திரன் (55) இவர்  சலூன்  கடை நடத்தி வருகின்றார்.

 ராஜேந்திரனின் மகன் ராமச்சந்திரன்  உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் திருப்பத்தூர் பகுதியில் தனியார் மருத்துவ மனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மகனை பார்க்க ராஜேந்திரன் தன்னுடைய மருமகள் ஜெயபிரதாவை  அழைத்துக் கொண்டு  மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

 அப்போது ராஜேந்திரனின் மனைவி கஸ்தூரி (50) மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கஸ்தூரி வீட்டை பூட்டாமல் அருகிலுள்ள   நிலத்திற்கு மாடு கட்ட  சென்றுள்ளார்.

மீன்டும் கஸ்தூரி நிலத்தில் இருந்து வீட்டிற்க்கு வந்து பார்க்கும்போது வீடு திறக்கப்பட்டு வீட்டில் வைக்கப்பட்டிருந்த பிரோ திறக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ந்து போய் உள்ளே சென்று பார்க்கும்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த15 சவரன் தங்க நகை, 1/2 கிலோ வெள்ளி மற்றும் ரொக்க பணம் 10 அயிரம் ஆகியவற்றை  மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

 இதுகுறித்து கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு  புகாரின் பேரில் சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

 மேலும் வேலூரில் இருந்து தடயவியல் நிபுணர் ஸ்ரீதர் தடயங்களை சேகரித்து  சென்றுள்ளனர். கந்திலி பகுதியில் தொடர் கொள்ளை காரணமாக  அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்து வருகின்றனர். 



திருப்பத்தூர் மாவட்டத்தில் கடைகள் திறக்கும் நேரம் அறிவிப்பு


திருப்பத்தூர்-2,

    திருப்பத்தூர் மாவட்டத்தில் 03.08.2020 திங்கட்கிழமை முதல் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை முடிவு செய்யும் வகையில் வட்டாட்சியர், மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர், நகராட்சி பொறியாளர் ஆகியோர் தலைமையில் வணிகர் சங்கம், நகை வியாபாரிகள் சங்கம்,  ஜவுளிக்கடை சங்கம், ஓட்டல் உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட அனைத்து  சங்கத்தினரிடமும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.


பின்னர் அனைவரின் கோரிக்கைகளை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் ஆலோசனை படியும், மளிகை கடை, காய்கறி கடை உள்ளிட்ட அனைத்து கடைகளும் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறந்திருக்கலாம்.
ஓட்டல் கடைகள் மட்டும் இரவு 8.00 மணிவரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

😷 கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும்.

🕴️ தனிமனித இடைவெளி தவறாமல் பின்பற்ற வேண்டும்.

❌ கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்த தளர்வும் பொருந்தாது.

❌ அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும்.

கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் நேரக்கட்டுப்பாடு மாற்றம் வர வாய்ப்பு உண்டு.

போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

 


சென்னை-2,

    தமிழக அரசு, பொது ஊரடங்கை ஆகஸ்ட் 31 வரை அறிவித்தது மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், மாநிலங்களுக்கிடையே செல்லவும் 'இ-பாஸ்' கட்டாயம் என  அறிவித்துள்ளது. இது, பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  நான்கு மாதங்களாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் கருதி, அரசு சில தளர்வுகளை அறிவித்தாலும், சாதாரண மக்கள், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து வழிபாட்டு தலங்களும், மாநிலம் முழுதும், பெரிய கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதால், கோவிலை சுற்றியுள்ள கடைகளின் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.வணிக வளாகங்கள் திறக்கப்படாததால், அதன் உரிமையாளர் மட்டுமின்றி, அங்கு பணிபுரிந்த ஊழியர்களும், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் பஸ், ரயில் போக்குவரத்து இல்லாததால், பெரும்பாலானோரால் பணிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. தனியார் பஸ்கள் இயங்காததால், அதில் பணிபுரிந்த ஊழியர்கள், வேலை இழந்துள்ளனர்.  திருமணம், இறப்பு, அவசர மருத்துவ சிகிச்சை போன்றவற்றுக்கு மட்டும், கடுமையான பரிசோதனைக்கு பிறகு இ-பாஸ் வழங்கப்படுகிறது; மற்றவற்றுக்கு வழங்கப்படுவதில்லை. இதனால், மக்கள் தங்களின், உறவினர்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. வீடு கிரகப்பிரவேசம், பெண், மாப்பிள்ளை பார்த்தல் போன்ற நிகழ்வுகளை நடத்த முடியவில்லை. வியாபார நிமித்தமாக, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியவில்லை.

இந்த மாதம், 23 மற்றும் 30ம் தேதிகள், முகூர்த்த நாட்கள் என்பதால், அன்றைய தினம் ஏராளமானோர், திருமணம் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். முழு ஊரடங்கு காரணமாக, அவர்கள் திருமணத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நாட்களில், திருமணம் நடத்த, அரசு அனுமதி அளிக்க வேண்டும். இ-பாஸ் நடைமுறையை, ரத்து செய்ய வேண்டும் அல்லது எவ்வித நிபந்தனையுமின்றி, விண்ணப்பிக்கும் அனைவருக்கும், இ-பாஸ் வழங்க, அரசு உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.







திருப்பத்தூர் ரத்னா'ஸ் லயன்ஸ் சங்கம் சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா


திருப்பத்தூர்-1,

    திருப்பத்தூர் ரத்னா'ஸ் லயன்ஸ் சங்கம் சார்பாக Dr.அப்துல் கலாம்  5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 100 நாட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

மா, பலா, நாவல்செடி, வேங்கை,  ஆலம், அரசம்,  பூவரசம், புங்கை, பாதாம், வேப்பம் போன்ற மரக்கன்றுகளை  ரத்னாஸ் லயன்ஸ் சங்கம் சார்பாக  சனிக்கிழமை (01-08-2020) காலை 9.30 மணிக்கு  தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய  பகுதி 1 குடியிருப்பில் மதன் தியேட்டர் அருகில் தொடங்கி நடைபெற்றது.

இந்நிகழ்வில் சங்க தலைவர் கிஷோர் பிரசாத் தலைமை தாங்கினார். உடன் சங்க பொருளாளர் சக்ரவர்த்தி. வட்டார தலைவர் ரத்தினம்,  Gmt ஆசிரியை புவனேஸ்வரி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள். கலந்துக் கொண்டனர்.

மரக்கன்றுகள் அனைத்தும் மாவட்ட தலைவர் லயன் M. ஜெனார்த்தனம் அன்பளிப்பாக அளித்தார்.


இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு


திருப்பத்தூர் -2,
    
 இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுள்ளது. தடையை மீறி வெளியில் வருபவர்கள் மீது காவல் துறை நடவடிக்கையை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆலயங்களுக்கும் தடை விதிக்கப்பட்துள்ளது  குறிப்பிடத்தக்கது.




5 பேர் கொண்ட மர்ம கும்பல் கைவரிசை பணம் மற்றும் மளிகை சாமான்கள் கொள்ளை.- போலீசார் விசாரணை.

 

திருப்பத்தூர்-1,
    கந்திலி அருகே 5  பேர் கொண்ட மர்ம கும்பல்   மளிகை ஸ்டோர்  உரிமையாளரை கத்தியால் குத்திவிட்டு 25 ஆயிரம் பணம்  மற்றும்  மளிகை சாமான்கள் கொள்ளை. கடையின் உரிமையாளர்களில் ஒருவர்   மருத்துவமனையில் சிகிச்சை!  கொள்ளையன் ஒருவர் கைது . போலீசார் விசாரணை

    திருப்பத்தூர் அடுத்த கந்திலி பகுதியில் வசித்துவரும் சீனிவாசன் (70), இவருடைய  மளிகை ஸ்டோர் மற்றும் வீடு ஒரே கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றது. சீனிவாசனுக்கு கிருஷ்ணகுமார் வயது 45,  மற்றும் ஸ்ரீதர் வயது 50 இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள்  சொந்தமாக சீனிவாசா மளிகை ஸ்டோர் கடை நடத்தி வருகின்றார்.

    இரவு மர்ம நபர்கள் 5 பேர் கொண்ட கும்பல் இவரது வீட்டிற்க்கு சென்று, மளிகை சாமான்கள் வேண்டும் என்றும் கூறி கடைக்குள் நுழைந்து, கடையில் உள்ள  சீனிவாசன், இவரது மகன் கிருஷ்ணகுமார் மற்றும் ஸ்ரீதர் ஆகியோரை கத்தியை  கொண்டு மிரட்டி தாக்கியதில் ஸ்ரீதருக்கு கையில் பலத்த காயம்  ஏற்பட்டுள்ளது.

    இவர்கள் கூச்சல் போடவே, மர்ம கும்பல் தப்பிச் செல்லும்போது, அதே பகுதியை சேர்ந்த சரவணன் இவரது மகன் சசிதரன் (23), அவர்களை பிடிக்க முயன்ற போது  கத்தியை கொண்டு மர்ம கும்பலை சேர்ந்த ஒருவர் சசிதரன் மார்பு பகுதியில் பயங்கரமாக   குத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
    
    படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்த சசிதரனை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்குச் சென்று, சிகிச்சை பெற்று வருகின்றார்.

 படுகாயங்களுடன் இருந்த கடையின் உரிமையாளர் ஸ்ரீதரை, பெங்களூர் தனியார் மருத்துவமனைக்குச் சென்று  சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ள நிலையில்,

    கந்திலி அடுத்த புங்கனூர்  பகுதியில் சந்தேகப்படும் படியாக  திருவள்ளூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த தரணிகுமார் (32) என்கிற ஒருவன் சுற்றித் திறிந்துள்ளான். அப்போது அப்பகுதி மக்கள் அவனை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், சந்தேகத்திற்குரியதாக பதில் அளித்துள்ளார்.

உடனே அப்பகுதி மக்கள் கந்திலி  காவல் நிலையத்தில் தெரியப்படுத்தினர்.

 கந்திலி காவல்துறையினர் விரைந்து சென்று அந்த நபரை பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில், இரவு நடந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக தெரியவருகிறது.

மற்றும் இவருடன் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை குறித்து  போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் கந்திலி காவல் நிலையம்  அருகாமை அமைந்துள்ளதால் பொது மக்களுக்கு  பீதியும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பேட்டி- கடையின் உரிமையாளர் மகன் கிருஷ்ணகுமார்.

திருப்பத்தூர் AGS மால் புதுமை - கை படாமல் ஹேண்ட் வாஷ், தண்ணீர் கொண்டு கை கழுவும் கருவி. பாருங்க நீங்களே ஆச்சரியப்படுவிங்க.