Saturday, August 15, 2020

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

சென்னை-15,

    நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று காலை தேசியக்கொடியேற்றி பேசினார்.    

    தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் தமிழக அரசின் சிறப்பு விருதுகளை வழங்கினார்.

சென்னையில் இருக்கும் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
 
 
 
FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

74-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் மா. ப. சிவன்அருள் தேசியகொடியேற்றினார்.

 திருப்பத்தூர் -15.

    74ஆம் ஆண்டு சுதந்திர தின விழா திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் ஆயுதப்படை காவலர் திடலில் நடைபெற்றது. மத்திய, மாநில அரசு அறிவிப்பின்படி முகக்கவசம் மற்றும் தனி மனித இடைவெளியுடன் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் மா.ப.சிவன்அருள் காலை 9.00 மணியளவில் தேசிய கொடியை ஏற்றி கொடிவணக்கம் செலுத்தினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொ.விஜயகுமார் உடன்இருந்தார். பின்னர் ஆயுதப்படை காவலர்களின் மரியாதையை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஏற்றனர். 

    பின்னர் கொரோனா தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவம், சுகாதாரதுறை, காவல் துறை, உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 

    விழாவில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும், திருப்பத்தூர் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். 






 

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை.

 

படும் நிலா பாலு

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி. அவர்கள் கடந்த 5-ம் தேதி கொரோனா தோற்று பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை அறிவிப்பு வெளியிட்டதாக தகவல்கள் பரவின. 

   ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரைப்பற்றிய வதந்திகள் பரவ தொடங்கியது. அவரது மகன் எஸ்.பி.பி.சரண் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிகிச்சையிலிருந்து விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் எனவும், தேவையற்ற வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். 

உலகம் முழுவதும் அவரது ரசிகர்களும், நண்பர்களும், அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்தவண்ணம் உள்ளனர்.

நாமும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கின்றோம்.

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

 

டெல்லி: 74-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி போன்ற தலைவர்களின் தியாகத்தால் நாம் சுதந்திர நாட்டில் வாழ்ந்து வருகிறோம். சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றி வருகிறார். கொரோனா சவாலை எதிர்கொள்ள சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை அரசு எடுத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Friday, August 14, 2020

விண்ணப்பிப்பவர்கள் அனைவருக்கும் உடனடியாக இ -பாஸ் வழங்கப்படும்.- தமிழக அரசு

 

 
சென்னை-14,
    வருகின்ற 17-ஆம் தேதி முதல் ஆதார் எண், ரேஷன் அட்டை, மொபைல் எண் உடன் இ-பாஸ் விண்ணப்பிப்பவர்கள் அனைவருக்கும் உடனடியாக இ -பாஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் தேவை இருந்தால் மட்டுமே இ-பாஸ் பெற விண்ணப்பிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பும், அதிருப்தியும் உள்ளது என தெரிவித்துள்ளனர். மேலும் இ-பாஸ் முற்றிலும் ரத்து செய்யவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தலைமை கழக செயலாளர் மாநிலங்களுக்கும், மாவட்டத்திற்கும் செல்ல தடை இருக்கும் வரை இ-பாஸ் நடைமுறையில் இருக்கும் என அறிவித்துள்ளார்.

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறும். - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

 சென்னை: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரும் 27-ம் தேதி முதல் செப்டம்பர் 25 ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் 25% சதவீத இடங்கள் ஏழை, எளிய மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

தமிழாய் இணைவோம்! இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!!

 


FOLLOW US OUR SOCIAL MEDIAS