Sunday, December 6, 2020

கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம், திருப்பத்தூர் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.

 திருப்பத்தூர்- டிச-05.

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து  வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மோகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 


இதில் அனைத்து வியாபார சங்கங்களின்  பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் ஏற்படும் இன்னல்கள் குறித்தும்,  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. 

நகராட்சி அலுவலர் ராஜரத்தினம் ஆலோசனை வழங்கினார். 

 திருப்பத்தூர் நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்க தலைவர்,  தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட பொருளாளர் அ.செந்தில்முருகன் உட்பட மற்ற சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Friday, December 4, 2020

விவசாய விளைச்சலை அழிக்கும் பன்றிகளை கட்டுப்படுத்தவேண்டும்., சாலை வசதி சரி செய்யவும் விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை.

     திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் பஞ்சாயத்தில் செல்வ ராயன் ஏரி வட்டம் பகுதியில் அதிகமான பன்றிகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றது. இந்தப் பன்றிகளை வளர்ப்பவர்கள் இதைப் பற்றி பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். இவ்வாறு விளைச்சல் பயிர்களை அளித்து வளரும் பன்றிகளை இறைச்சி விற்பனைக்காக தேவைப்படும் போது மட்டுமே பிடித்து செல்கின்றனர். 

    இதற்கு துறை சார்ந்த நடவடிக்கையை ஊராட்சி நிர்வாகம் மேற்கொள்ளவேண்டும். பன்றிகளை வளர்ப்பவர்கள் அவர்களது இடத்திலேயே பட்டி அமைத்து வளர்க்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மேலும் இப்பகுதியில் குடிநீர் தொட்டி உள்ளது. அங்கு ஆதியூர் சுற்றிலும் பல்வேறு பகுதியில் இருந்து குடிநீர் பிடித்து செல்ல தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அப்பகுதியில் தற்போது சாலை வசதி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சாலையில் அங்கு குடியிருப்பவர்கள், குடிநீர் தேவைக்கு வந்து செல்பவர்களும் மிகவும் அபாயகரமான பயணத்தை செய்ய வேண்டியுள்ளது. எனவே சாலையை ஊராட்சி நிர்வாகம் சீர்செய்து தரவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

 



 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவனுக்கு உதவித்தொகை

திருப்பத்தூர்-03

திருப்பத்தூர் மாவட்டம் ரத்னா'ஸ் லயன்ஸ் சங்கம் சார்பாக  பெரிய கண்ணாலப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவன் S. கோவிந்தராஜ் -க்கு திருப்பத்தூர்  ரத்னா'ஸ் லயன்ஸ் சங்கம் மூலம் ரூபாய் 15,000 உதவித்தொகை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமையில்  வழங்கப்பட்டது.

 


 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

Saturday, November 28, 2020

திருப்பத்தூர் அருகே தேங்கியிருக்கும் குப்பை கழிவுகள் - நோய் தொற்று ஏற்படும் அபாயம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 


    திருப்பத்தூரில் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அசோக்நகர் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். 

 இந்த நிலையில் குப்பை கழிவுகளை தெருக்களில் கொட்டித் தேக்கி வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகின்றது.  நோய்த்தொற்று ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஊராட்சி ஒன்றியம் இதில் கவனத்தைக் கொண்டு தேங்கியுள்ள குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

திருப்பத்தூர் மாவட்டம் பிறந்தநாள் விழா

திருப்பத்தூர் -28

    திருப்பத்தூர் மாவட்டம் கடந்த நவம்பர் 28 ஆம் தேதி தமிழக முதல்வர். எடப்பாடி .பழனிச்சாமி அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது.

இதனையடுத்து ஒரு வருடம் முடிந்த நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்டம் பிறந்தநாள் விழா, தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகம் திறப்பு விழா மற்றும் நூல்கள் வெளியீட்டு விழா என முப்பெரும் விழாவாக நடைப்பெற்றது.

விழாவில்  வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு தமிழ் வளர்ச்சித்துறை புதிய  அலுவலகத்தை திறந்து வைத்து நூல்களை வெளியிட மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் பெற்று கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.சி.வீரமணி

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு விரைவில் அரசு மருத்துவ கல்லூரி வர அனைத்து ஏற்பாடுகளும் நடைப்பெற்று வருகிறது எனவும் மேலும் சுதந்திரத்திற்கு பிறகு வாணியம்பாடி அடுத்த நெக்னாம்மலை மழைவாழ் மக்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது  வரலாற்று சாதனை ஆகும் என தெரிவித்தார்.

திருப்பத்தூர் நகராட்சியில் சுமார் 105கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் முடியும் தருவாயில் உள்ளதால் மக்களின் பயன்பாட்டிற்கு உடனடியாக வரும் எனவும் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்திலே திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை  கட்டுபடுத்திய அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கும் வாழ்த்துக்கள் என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

கோழி கழிவுகள் ஆற்றில் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை தேவை என பொதுமக்கள் கோரிக்கை.


திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுக்கா, மிட்டூர் அடுத்த விளாங்குப்பம் செல்லும் வழியில்  உள்ள ஆற்றில்  பல வருடங்களுக்கு  பிறகு நிவர் புயல் காரணமாக பெய்த மழையால் இந்த ஆற்றில் தண்ணீர் வர தொடங்கியது. அந்த நீரில் கோழி கழிவுகள் அதிகம் கலந்து வருகிறது.

இந்த ஆற்றில் மிட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கோழி கழிவுகளை அதிகம் கொட்டப்படுகிறது எனவும் இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


இதனால் இதை தடுக்கும் வகையில் சுற்றுப்புற சுகாதார துறை சார்ந்த நடவடிக்கை தேவை என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

பொது பொது மக்கள் காலி குடங்களுடன் முற்றுகை போராட்டம்


 திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கடந்த 16 நாட்களாக குடிநீர் வழங்காததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 திருப்பத்தூர் தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு பகுதி -1 மற்றும் 2 உள்ளது.  இங்கு சுமார் 2 ஆயிரம் வீடுகள் உள்ளன .
 இந்த குடியிருப்பு பகுதிகளுக்கு நகராட்சி சார்பில் தர்மபுரி தென்பெண்ணை ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
 ஆனால் கடந்த 16 நாட்களாக இந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை.

 இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் நகராட்சிக்கு பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஓய்வு பெற்ற மின்சார வாரிய அலுவலர் எஸ் விஜயன் தலைமையில் காலிக்குடங்களுடன் வீட்டு வசதி குடியிருப்பு பகுதியிலுள்ள நகராட்சி குடிநீர் மற்றும் வீட்டு வரி வசூல் செய்யும் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடிநீர் கேட்டு போராட்டம் நடத்தினர்.

குடிநீர் வழங்காதது குறித்து பொதுமக்கள் கூறுகையில் தென்பெண்ணை ஆற்று பகுதியில் இருந்து மோட்டார் மூலம் குடிநீர் அனுப்பும் பணியாளர்களுக்கு 6 மாத சம்பளம் தராததால் தண்ணீரை அவர்கள் அங்கிருந்து மோட்டார் மூலம் திருப்பத்தூர் பகுதிக்கு அனுப்பவில்லை என குற்றம் சாட்டினார்கள்.

அப்போது அவர்களிடம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் உறுதி அளித்தார். அதன் பேரில் அங்கு இருந்தவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US OUR SOCIAL MEDIAS