ஊர்திகளுக்காக வாங்கிய கடனுக்கான தவணைக் தொகையையே கட்ட முடியாததால், அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும் என்று தெரிந்தும், கடன் தவணை ஒத்திவைப்பு திட்டத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். இத்தகைய சூழலில் வாடும் அவர்களை சாலைவரி கட்டும்படி கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்? எனவே, கொரோனா சூழல் சீரடையும் வரை சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, அவர்களுக்கு அடுத்த சில மாதங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்க மத்திய, மாநில அரசுகள் திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும்.
Pages - Menu
Translate
Tuesday, August 4, 2020
வருமானமே இல்லாத நிலையில் வாடகை வாகனங்களுக்கு சாலை வரியா?: மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் கேள்வி
ஊர்திகளுக்காக வாங்கிய கடனுக்கான தவணைக் தொகையையே கட்ட முடியாததால், அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும் என்று தெரிந்தும், கடன் தவணை ஒத்திவைப்பு திட்டத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். இத்தகைய சூழலில் வாடும் அவர்களை சாலைவரி கட்டும்படி கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்? எனவே, கொரோனா சூழல் சீரடையும் வரை சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, அவர்களுக்கு அடுத்த சில மாதங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்க மத்திய, மாநில அரசுகள் திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும்.
Sunday, August 2, 2020
கரோனாவின் பாதிப்புகள் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும்: உலக சுகாதார அமைப்பு
கரோனாவால் உலகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பல ஆண்டுகளாகத் தொடரும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, ஜெனீவாவில் அமைந்துள்ள அந்த அமைப்பின் தலைமையகத்தில், புதன்கிழமை நடைபெற்ற அமைப்பின் அவசரக்கால குழுக் கூட்டத்தில் தலைவா் டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது:
6 மாதங்களுக்கு முன்னா் சீனாவுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை 100-க்கும் குறைவாகவே இருந்தது. ஆனால், அப்போதே அந்த நோய்த்தொற்று பரவலை சா்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவிக்க வேண்டும் என்று நீங்கள் பரிந்துரை செய்தீா்கள். அப்போதைய நிலையில் கரோனா நோய்த்தொற்றை சா்வதேச சுகாதார நெருக்கடியாக நினைப்பது வேடிக்கையாக இருந்திருக்கும்.
ஆனால், இப்போது அந்த நோய்த்தொற்று உலகம் முழுவதையும் பாதித்துள்ளது. இதுபோன்ற ஒரு கொள்ளை நோய் உலகில் நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் உலகைத் தாக்கும். இதன் பாதிப்புகளை உலகம் இன்னும் பல பதின்ம ஆண்டுகளுக்கு உணரும்.
கரோனா நோய்த்தொற்று குறித்த அறிவியல் ரீதியிலான பல கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியவில்லை. பல புதிா்கள் இன்னும் விடுவிக்கப்படாமலேயே இருக்கின்றன.
பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட ஆய்வு முடிவுகள் அனைத்தும் ஒரே மாதிரி இருக்கின்றன. உலகின் பெரும்பாலான மக்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பல நாடுகள் கரோனா நோய்த்தொற்றின் தீவிரத்திலிருந்து விடுபட்டதாக தங்ககளைக் கருதி கொண்டன. ஆனால், அதே நாடுகளில் அந்த நோய்த்தொற்று மீண்டும் தீவிரமடைந்தது. சில நாடுகளில் பல வாரங்களாக கரோனா நோய்த்தொற்று பரவல் மிதமாகவே இருந்தது. ஆனால், அந்தப் பகுதிகளில் திடீரென நோய்த்தொற்று பரவலும், அந்த நோயால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரிப்பதைக் காண முடிகிறது.
இன்னொரு புறம், கரோனா நோய்த்தொற்று கடுமையாகப் பரவி வந்த சில நாடுள் அந்த நோய்த்தொற்று பரவலை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளன.
கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக பொது முடக்கங்கள் அமல்படுத்தப்படுவதால், நாடுகளின் பொருளாதாரம் கடுமையான பின்னடைவைச் சந்தித்து வருகின்றது. எனவே, நன்கு செயல்படக் கூடிய கரோனா தடுப்பு மருந்து கண்டறியப்படுவதே அந்த நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழியாகத் தெரிகிறது.
இதுவரை இல்லாத சாதனை வேகத்தில் கரோனா தடுப்பு மருந்தை உருவாக்கினாலும், அந்த மருந்து அனைவரையும் சென்றடைவதற்கு வெகு காலம் ஆகும்.
அதுவரை, அனைவரும் கரோனாவோடு வாழ்ந்துகொண்டே, கைவசம் இருக்கும் ஆயுதங்களைக் கொண்டே அதற்கு எதிராகப் போராட வேண்டும் என்றாா் டெட்ரோஸ் அதனோம்.
சனிக்கிழமை நிலவரப்படி உலகம் முழுவதும் 1.78 கோடிக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த நோய்க்கு இதுவரை 6.84 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் பலியாகியுள்ளனா். அந்த நோயால் பாதிக்கப்பட்ட 1.1 கோடிக்கும் மேற்பட்டவா்கள் குணமடைந்துள்ளனா்.
உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிகம் பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 47,07,584-ஆக உள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேஸிலில் 26,66,298 பேருக்கு அந்த நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா 3-ஆவது இடத்தில் உள்ளது.
கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் அதிக உயிா்களை பலி கொடுத்த நாடுகளின் பட்டியலிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி அந்த நாட்டில் 1.56 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனா்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, பிரேஸிலில் 92,568 போ் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமா உயிரிழந்துள்ளனா். 3-ஆவது இடத்துக்கு வந்துள்ள மெக்ஸிகோவில் 46,688 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு பருவமழை நாளை முதல் மேலும் வலுவடையும்
தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் தென்மேற்கு வங்கக் கடல் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பட்டா கத்தியுடன் வழிப்பறி கொள்ளை அடிக்க முயற்சி செய்த இளைஞர்கள். பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
ஆடி பதினெட்டாம் பெருக்கு
திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் தங்க நகை திருட்டு. போலீஸ் வலைவீச்சு.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மானவள்ளி பகுதியில் வசித்துவரும் ராஜேந்திரன் (55) இவர் சலூன் கடை நடத்தி வருகின்றார்.
ராஜேந்திரனின் மகன் ராமச்சந்திரன் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் திருப்பத்தூர் பகுதியில் தனியார் மருத்துவ மனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மகனை பார்க்க ராஜேந்திரன் தன்னுடைய மருமகள் ஜெயபிரதாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அப்போது ராஜேந்திரனின் மனைவி கஸ்தூரி (50) மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கஸ்தூரி வீட்டை பூட்டாமல் அருகிலுள்ள நிலத்திற்கு மாடு கட்ட சென்றுள்ளார்.
மீன்டும் கஸ்தூரி நிலத்தில் இருந்து வீட்டிற்க்கு வந்து பார்க்கும்போது வீடு திறக்கப்பட்டு வீட்டில் வைக்கப்பட்டிருந்த பிரோ திறக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ந்து போய் உள்ளே சென்று பார்க்கும்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த15 சவரன் தங்க நகை, 1/2 கிலோ வெள்ளி மற்றும் ரொக்க பணம் 10 அயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு புகாரின் பேரில் சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் வேலூரில் இருந்து தடயவியல் நிபுணர் ஸ்ரீதர் தடயங்களை சேகரித்து சென்றுள்ளனர். கந்திலி பகுதியில் தொடர் கொள்ளை காரணமாக அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடைகள் திறக்கும் நேரம் அறிவிப்பு
ஓட்டல் கடைகள் மட்டும் இரவு 8.00 மணிவரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
😷 கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும்.
🕴️ தனிமனித இடைவெளி தவறாமல் பின்பற்ற வேண்டும்.
❌ கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்த தளர்வும் பொருந்தாது.
❌ அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும்.





